கைது செய்யப்பட்ட கும்பலில் ஒருவரும் துபேவும், அவரது இரண்டு பேர் சைக்கிளில் சிவ்லியை அடைந்து, அடுத்த இரண்டு நாள்கள் நண்பரின் இடத்தில் தங்கியிருந்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்தனர். பின்னர், அவர்களில் இருவர் லக்னோவுக்கு பைக்கில் புறப்பட்டனர். துபே அமருடன் சேர்ந்து ஹரியானாவுக்கு ஒரு டிரக்கில் புறப்பட்டு ஃபரிதாபாத்தை அடைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
8 காவல் துறையினரை படுகொலை செய்த விகாஸ் துபே கைது! சிசிடிவி பதிவுகள்...
கான்பூரின் உள்ளூர் ரவுடியான விகாஸ் துபே என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்யச் சென்றனர். அப்போது, துபேவின் ஆட்கள் காவல் துறையினர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைவெறி தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் இரண்டு ரவுடிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் விசாரணையின்போது தப்பியோட முயன்ற இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.