கோவிட் -19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு புதுமையான சிகிச்சையை வழங்கும்பொருட்டு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ நிறுவனமான ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (எஸ்.சி.டி.எம்.எஸ்.டி) ஒரு முன்னேற்றத்தை பெற்றுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக “சுறுசுறுப்பான-பிளாஸ்மா சிகிச்சை” என்று அழைக்கப்படும் இந்த சிகிச்சையானது, மீட்கப்பட்ட ஒருவரால் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை நோயுற்ற ஒருவருக்கு சிகிச்சையளிப்பதைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இரத்த தானத்திற்கான விதிமுறைகளை தளர்த்தும் அனுமதிகளுக்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குனருக்கு (டி.சி.ஜி.ஐ) விண்ணப்பம் அளித்துள்ளோம் என்று ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SCTIMST) இயக்குனர் டாக்டர் ஆஷா கிஷோர் கூறினார்.
இந்தச் சிகிச்சை குறித்த கேள்விகளுக்கு டாக்டர் ஆஷா கிஷோர் அளித்த பதில்கள் வருமாறு:-
- பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?
புதிய கரோனா வைரஸ் (கோவிட்-19) போன்ற ஒரு நோய்க்கிருமி பாதிக்கும்போது, நமது நோயெதிர்ப்பு அமைப்புகள் ஆன்டிபாடிகளை (எதிர்ப்பு சக்திகளை) உருவாக்குகின்றன. அவைகள் உடலில் இருக்கும் வைரஸை எதிர்கொண்டு வேட்டையாடும் ஆற்றல்மிக்கவை. இரத்த வெள்ளை அணுக்கள் அடையாளம் காணப்பட்ட வைரஸ் ஊடுருவல்களை எதிர்க்கின்றன. மேலும் உடல் தொற்றுநோயிலிருந்து விடுபடுகிறது. இந்தச் சிகிச்சை இரத்தமாற்றம் போன்றது. மீட்கப்பட்ட நோயாளியிடமிருந்து ஆன்டிபாடியை பெற்று நோய்வாய்ப்பட்ட நபருக்கு உட்செலுத்தப்படுகிறது. இந்த ஆன்டிபாடிகள் உதவியுடன், நோயெதிர்ப்பு சக்திகள் வலுப்பெற்று வைரஸூக்கு எதிராக வலிமையாக போரிடும்.
- ஆன்டிபாடிகள் என்றால் என்ன ?
ஆன்டிபாடிகள் (நோயெதிர்ப்பு சக்தி) என்பது ஒரு வகையான நுண்ணுயிரி. இது புதிய கரோனா வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்கொள்ள பயன்படுகின்றன. இவைகள் பிலிம்போசைட்டுகள் எனப்படும் நோயெதிர்ப்பு உயிரணுக்களால் சுரக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகை புரதங்கள். கிருமியின் வகைக்கு ஏற்ப நோயெதிர்ப்பு அமைப்புகள் வலுப்பெறுகிறது. அதனடிப்படையில் ஒரு குறிப்பிட்ட ஆன்டிபாடிகளை வடிவமைக்கிறது.
- சிகிச்சை எவ்வாறு வழங்கப்படுகிறது?
கோவிட்-19 பெருந்தொற்று நோயிலிருந்து மீண்ட ஒருவரிடமிருந்து இரத்தம் எடுக்கப்படுகிறது. அதிலிருந்து சீரம் பிரிக்கப்படுகிறது. ஒரு தொற்றுநோயிலிருந்து மீண்டு, குறிப்பாக அந்த நோய்க்கிருமிக்கான ஆன்டிபாடிகள் நிறைந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட இரத்த சீரம், பின்னர் கோவிட்-19 நோயாளிக்கு வழங்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்டவர்கள் செயலற்ற நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெறுகிறார்கள்.
இரத்த சீரம் பிரித்தெடுக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் சாத்தியமான நன்கொடையாளர் பரிசோதிக்கப்படுவார். முதலில், நன்கொடையாளர் முழுவதுமாக பரிசோதிக்கப்படுவார். அவருக்கு வைரஸ் தாக்குதல் முழுமையாக குணப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் இரத்த நன்கொடையாளர் இரு வாரங்கள் காத்திருக்க வேண்டும். இல்லையெனில் சாத்தியமான நன்கொடையாளர் குறைந்தது 28 நாட்களுக்கு வைரஸ் அறிகுறியற்றவராக இருக்க வேண்டும். இரண்டில் ஒன்று கட்டாயமாகும்.
- யார் சிகிச்சை பெறுவார்கள்?
ஆரம்பத்தில் நாங்கள் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு முயற்சிப்போம். தற்போது இது கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே தடைசெய்யப்பட்ட பயன்பாட்டிற்கான ஒரு சோதனை சிகிச்சையாக அனுமதிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் பல்வேறு கட்ட ஒப்புதல் உள்ளது. அதன் பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
- தடுப்பூசியிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
உடலிலுள்ள நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. செயலற்ற ஆன்டிபாடி சிகிச்சையின் விஷயத்தில், செலுத்தப்பட்ட ஆன்டிபாடிகள் இரத்த ஓட்டத்தில் இருக்கும் வரை மட்டுமே இதன் விளைவு நீடிக்கும். கொடுக்கப்பட்ட பாதுகாப்பு தற்காலிகமானது.
தனது சொந்த நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தை வளர்வதற்கு முன்பு தாய்ப்பாலாக தாய் கொடுப்பாள். அதுபோல உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலுப்பெற கொடுக்கப்படும் தற்காலிக சிகிச்சை இது.
இந்தச் சிகிச்சை செயலற்ற ஒருவருக்கு கொடுக்கப்படும் நோய்த்தடுப்புக்குக்கு ஒத்ததாகும். நோயெதிர்ப்பு சக்தியை தாய் குழந்தைக்கு மாற்றுவது போல, குணமடைந்தவரிடமிருந்து பாதிக்கப்பட்ட நபருக்கு ஆன்டிபாடிகள் மாற்றப்படுகிறது.
- இதன் வரலாறு என்ன?
1890 ஆம் ஆண்டில், எபில் வான் பெஹ்ரிங் என்ற ஜெர்மன் உடலியல் நிபுணர், டிப்தீரியா நோயால் பாதிக்கப்பட்ட முயலிலிருந்து பெறப்பட்ட சீரம் டிப்தீரியா நோய்த்தொற்றைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டுபிடித்தார். 1901 ஆம் ஆண்டில் பெஹ்ரிங்கிற்கு மருத்துவத்திற்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அந்த நேரத்தில் ஆன்டிபாடிகள் அறியப்படவில்லை. அப்போது சுறுசுறுப்பான சீரம் சிகிச்சை குறைவான செயல்திறன் கொண்டது மற்றும் கணிசமான பக்க விளைவுகளைக் கொண்டிருந்தது. ஆன்டிபாடிகள் பிரிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆனது. இன்னும், திட்டமிடப்படாத ஆன்டிபாடிகள் மற்றும் அசுத்தங்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
- இது பயனுள்ளதா?
பாக்டீரியா தொற்றுக்கு எதிராக பயனுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள் எங்களிடம் உள்ளன. இருப்பினும், எங்களிடம் பயனுள்ள ஆன்டிபாடிகள் இல்லை. ஒரு புதிய வைரஸ் தொற்று ஏற்படும் போதெல்லாம், அதற்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை.
எனவே, கடந்த வைரஸ் தொற்றுநோய்களின் போது சுறுசுறுப்பான சீரம் பயன்படுத்தப்பட்டது. 2009-2010 எச்-1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றுநோய் பரவிய போது, பிளாஸ்மா சிகிச்சைக்கு தொற்றுநோயாளிகள் பயன்படுத்தப்பட்டனர்.
ஆன்டிபாடி சிகிச்சை பெற்றவர்களின் உடலில் முன்னேற்றம் காணப்பட்டது. மேலும் இறப்பு விகிதமும் குறைந்தது. 2018ஆம் ஆண்டில் எபோலா பரவியபோதும் இந்த செயல்முறை பயனுள்ளதாக இருந்தது.
- இது பாதுகாப்பானதா?
நவீன காலத்தில் இரத்தத்தில் பரவும் நோய் கிருமிகளை போன்று அவற்றை எதிர்த்து போராடும் நோயெதிர்ப்பு அமைப்புகளும் (ஆன்டிபாடிகள்) வலிமையானவை. மேலும் நன்கொடையாளர்களிடம் இரத்தம் பெறுவதிலும் பிரச்னை இல்லை.
ஏனெனில் இதுவும் இரத்த தானம் செய்வது போன்றதுதான். இரத்தம் பொருந்தக்கூடிய நபர்கள் மட்டுமே இரத்த தானம் செய்யவோ அல்லது பெறவோ முடியும். இரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் நன்கொடையாளர் கடுமையாக பரிசோதிக்கப்படுவார். ஹெபடைடிஸ், எச்.ஐ.வி, மலேரியா போன்றவற்றுக்கான பரிசோதனைகளை அவர்கள் மேற்கொள்வார்கள். அவை வேறுபட்ட நோய்க்கிருமியை பெறுநருக்கு அனுப்பாமல் இருப்பதை உறுதிசெய்கின்றன.
- ஆன்டிபாடிகள் பெறுநரிடம் எவ்வளவு காலம் இருக்கும்?
ஆன்டிபாடி சீரம் வழங்கப்பட்ட பிறகு, அது குறைந்தது மூன்று முதல் நான்கு நாட்கள் வரை பெறுநரிடம் இருக்கும். இந்த காலகட்டத்தில், நோய்வாய்ப்பட்ட நபர் குணமடைவார். அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து ஆராய்ச்சி அறிக்கைகள் முதல் மூன்று அல்லது நான்கு நாள்களில் பரிமாற்ற பிளாஸ்மாவின் நன்மை விளைவைப் பெறுகின்றன. அதன்பின்னர் தொடர்ந்து அவைகள் செயல்படாது. மேலும் கோவிட்-19 போன்ற நோய்களிலிருந்து சிகிச்சைக்கு பின்னர் மீட்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் தானாக முன்வந்தும் இரத்த தானம் செய்ய இயலாது.
இவ்வாறு டாக்டர் ஆஷா கிஷோர் பதிலளித்தார்.
இதையும் படிங்க: நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?