ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வசித்துவருபவர் கல்யாண். இவர் நேற்று மதுபோதையில் தனது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். மறுப்பு தெரிவித்த சிறுமியை தாக்கி சித்ரவதையும் செய்துள்ளார்.
காமக்கொடூரன் அவரது மகளை துன்புறுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, காவல் துறையினர் உடனடியாக அவரைக் கைதுசெய்து, அச்சிறுமியை மீட்டுள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட சிறுமியின் உடல் முழுவதும் தீக்காயங்களும், காயங்களும் காணப்பட்ட நிலையில் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும், சிறுமியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவருடைய சிகிச்சைக்கு பின்னரே உடல்நிலை குறித்தான தகவல் தெரியவரும் எனவும், இதுதொடர்பாக சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் தனது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, தாக்குதல் நடத்திய தந்தையின் வெறிச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!