ஜம்மு: இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியாக அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கிறது ஆர்.எஸ்.புரா பகுதி. இங்கு நேற்று (நவ. 28) இரவு எவ்வித அனுமதியுமின்றி திடீரென ட்ரோன் ஒன்று பறந்து வந்ததாக எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அவர்கள் தெரிவிக்கையில், "கடந்த 21ஆம் தேதி இந்திய எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை அடுத்து அப்பகுதியில் ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்தது.
இதற்கிடையில் நவம்பர் 20ஆம் தேதி பாகிஸ்தானை நோக்கி இரண்டு ட்ரோன்கள் சம்பா பகுதியில் சென்றதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய- பாகிஸ்தான் சர்வதேச எல்லையான ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் திடீரென ட்ரோனை பறக்கவிட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காஷ்மீருக்குள் ட்ரோன் அனுப்பி கண்காணிக்கும் பாகிஸ்தான் ராணுவம்!