தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவரிடம் இருந்து 42 தங்க பிஸ்கட் கட்டிகள் சோதனையின்போது கைப்பற்றினர். இதுகுறித்து பிடிபட்ட நபரிடம் விசாரணை செய்தபோது, இரண்டு பேர் நேற்று துபாய் விமான நிலையத்தில் இருந்து இதனை கொடுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
மேலும், 42 பிஸ்கட் கட்டிகளும் 99 சதவிகிதம் தங்கம் என்றும், அதனுடைய மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்றும் சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண்களை விருந்தாக்கி அரசு ஒப்பந்தம்? - ம.பி.யில் கொடிகட்டிப் பறக்கும் பாலியல் ஊழல்