உத்தர பிரதேச மாநிலம் வாரனாசியிலுள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி வேட்டி, சட்டை அணிந்துவரும் ஆண் பக்தர்களும் புடவை அணிந்துவரும் பெண் பக்தர்களும் மட்டுமே கோயிலின் கருவறைக்குள் சென்று சாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
ஜீன்ஸ் உள்ளிட்ட பிற ஆடைகளை அணிந்துவரும் பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்து மட்டுமே காசி விஸ்வநாதரை வழிபடமுடியும். இந்த புதிய விதிகள் எப்போது முதல் அமலுக்குவரும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், கூடிய விரைவில் இந்த ஆடைக் கட்டுபாடுகள் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமரை விவாதத்திற்கு அழைக்கும் ப. சிதம்பரம்