இந்தியாவில் கரோனா பாதிப்பைத் தடுக்க அரசுடன் சேர்ந்து பல்வேறு நிறுவனங்களும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் புதிய வகை கிருமிநாசினி தெளிக்கும் கருவியை வடிவமைத்துள்ளது.
இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்சார் மூலம் இயங்கும் கிருமிநாசினி தெளிப்பானை டி.ஆர்.டி.ஓ நிறுவனம் வெற்றிகரமாக தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அல்ட்ரா சானிக் சென்சார் தொழில்நுட்பத்தில் 12 நொடிகளில், இக்கருவி கிருமிநாசினியை வெளியிடும் எனவும்; திரவம் அதிக அளவில் வீணாகாத வகையில், இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அலுவலகங்களிலும் இதை எளிய முறையில் பயன்படுத்தலாம் எனவும், மற்ற அமைப்புகள், நிறுவனங்களுக்கு இந்தக் கருவியை தயாரித்துத்தர டி.ஆர்.டி.ஓ முயற்சிப்பதாகவும் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எஸ். ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவும் அமெரிக்க நிறுவனங்கள்!