ETV Bharat / bharat

இரட்டைக் கொலை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை

ஹைதராபாத்: இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் நேற்று (ஜூலை 1) ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

Suicide case
Suicide case
author img

By

Published : Jul 2, 2020, 2:25 PM IST

இரட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அகமது பின் சலாம் (25) என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்று உதவி காவல் ஆணையாளர் ஃபலக்னுமா எம்.ஏ.ரஷீத் (இன்று ஜூலை 2) தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த திங்கள்கிழமை, சலாம் தனது இரண்டு சகோதரிகளான ரசியா பேகம் (35), ஜாகிரா பேகம் (45) ஆகியோரைக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மேலும் அவரது தங்கை, மைத்துனரை ஒரே நாளில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 1) அவர் சந்திரயங்குட்டா காவல் நிலையத்தின் எல்லையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இது குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

இதையும் படிங்க: இந்தியன் வங்கி ஊழியருக்கு கரோனா: அச்சத்தில் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.