ETV Bharat / bharat

ஊரடங்கு : சலிப்பை சமாளிக்க புகையிலை, மதுவை பயன்படுத்த வேண்டாம் - சுகாதார அமைச்சகம்

டெல்லி : ஊரடங்கு சலிப்பை சமாளிக்க புகைப்பதும், மது அருந்துவதும் மன ஆரோக்கியத்தை கெடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் பாதிக்கும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Don't use tobacco, alcohol to cope with boredom during lockdown: Health Ministry
ஊரடங்கு : சலிப்பை சமாளிக்க புகையிலை, மதுவை பயன்படுத்த வேண்டாம் - சுகாதார அமைச்சகம்
author img

By

Published : Mar 31, 2020, 9:37 PM IST

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் -19 பெருந்தொற்று இந்தியாவில் தீவிரமாகி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய அளவில் வைரஸ் பெருந்தொற்று 2ஆம் நிலையை அடைந்து தீவிரமடைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது. கோவிட் -19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதிவரை முழுமையான நாடு தழுவிய ஊடரங்கு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பலரும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த சுகாதார அமைச்சகம், “ மத்திய அரசு அறிவித்திருக்கும் நாடு தழுவிய முழுமையான ஊரடங்கு என்பது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், நம்மையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்குமேயாகும்.

இந்த ஊரடங்கு, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதை தடுப்பதல்ல. வெகுதூர வெளி பயணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதை தடை செய்யவும் இது அறிவுறுத்துகிறது. தேவைப்படும் போது வீட்டின் ஒரேயொரு உறுப்பினர் மட்டுமே பயணங்களை மேற்கொள்வது சிறந்தது.

வீட்டில் யாராவது ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தால், மருத்துவ உதவிப் பெற வேண்டியிருந்தால், உங்களுக்கு மிக அருகிலுள்ள சுகாதார வசதி குறித்து நீங்கள் அறிந்து வைத்திருங்கள்.

போதைப் பொருள் பயன்பாட்டை கைக்கொண்டிருக்கும் சிக்கல் உள்ளவர்கள் நிபுணர்களின் உதவியை கோர வேண்டும், குறிப்பாக அவர்கள் மன அழுத்தத்தை உணரும்போது அவர்கள் கண்டிப்பாக மனநல ஆலோசகர்களின் உதவியை பெற வேண்டும்.

உலகம் முழுவதிலுமிருந்து கோவிட்-19 வைரஸ் பரவுவதைப் பற்றி தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், செய்தித்தாள்கள், குடும்பத்தினர், நண்பர்கள், இன்ன பிறவற்றின் பின்னணியில் கிடைக்கும் செய்திகளை நாம் கேள்விப்படுவதால் இவை நம் அனைவருக்கும் கடினமான காலங்களாக அமைந்திருக்கிறது. இது நாம் அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான பய உணர்ச்சி தான். இது நம்மை கவலை அடைய வைக்கிறது. மேலும், சாதாரண சூழ்நிலைகளில் நாம் சிந்திக்கும் பலவற்றை இது முற்றிலும் மாற்றுகிறது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் பீதி அடைய வேண்டாம். அதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் நலமடைந்து வருகின்றனர். சுய-தனிமைப்படுத்தலுக்குள் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அதனை மனவள, உடல்வள பயிற்சிகளுக்கு பயன்படுத்துங்கள். மருத்துவர் அறிவுறுத்தும் மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள் .

சமூக தனிமைப்படுத்தலைக் கையாள்வதற்கான உதவிக்குறிப்புகளைக் கொடுத்து, அமைச்சகம் வீட்டிலேயே தங்கியிருப்பது சில காலம் மிகவும் அருமையாக இருக்கும். இதன் மூலமாக சலிப்பை போக்க முடியும். மேலும் பிஸியாக இருக்கவும், இசையைக் கேட்பதன் மூலமும், வாசிப்பதன் மூலமும் பொழுதுபோக்கி, எதிர்மறை உணர்ச்சிகளிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளலாம்.

Don't use tobacco, alcohol to cope with boredom during lockdown: Health Ministry
ஊரடங்கு : சலிப்பை சமாளிக்க புகையிலை, மதுவை பயன்படுத்த வேண்டாம் - சுகாதார அமைச்சகம்

உங்களைச் சுற்றியுள்ள ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தால் அவருக்கு ஆறுதலாக இருங்கள். உணவு அல்லது பிற அத்தியாவசியங்கள் தேவைப்பட்டால் புரிந்து கொண்டு கொடுங்கள். அன்பை பகிர்ந்து கொள்ள தயாராக இருங்கள். வயதானவர்கள் குழப்பமடைந்து மனசிக்கல்களுக்கு ஆட்படலாம். எனவே, அவர்களுக்குத் தேவையான மருந்துகள், உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளை அவர்களுக்கு தவறாமல் வழங்குங்கள்.

பரபரப்பான செய்திகள் அல்லது சமூக ஊடக இடுகைகளைப் பின்பற்ற வேண்டாம், அவை உங்கள் மன நிலையை பாதிக்கலாம். சுய பாதுகாப்புக்காக மிகவும் நம்பகமான தகவல்களை மட்டுமே நம்புங்கள். சரிபார்க்கப்படாத செய்திகள் அல்லது உறுதியற்ற தகவல்களை பரப்பினால் அவர்கள் குறித்த தகவலை காவல்துறைக்கு அறியப்படுத்துங்கள்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கரோனா தொற்றை விரட்டுவதில் சமூக ஒன்றிணைதலின் பங்களிப்பு - நந்தா கிஷோர் கன்னூரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.