கோப்புகள், பிற ஆவணங்களின் பக்கங்களைத் திருப்புவதற்கு உமிழ்நீரைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அலுவலர்கள், ஊழியர்களைக் கேட்டு ரேபரேலியின் தலைமை மேம்பாட்டு அலுவலர் (சி.டி.ஓ.) அபிஷேக் கோயல் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்தப் பழக்கத்தை விடுவது தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க உதவும் என்றும் அவர் கூறுகிறார்.
இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், "கோப்புகளின் பக்கத்தைத் திருப்புவதற்கு அலுவலர்களும் ஊழியர்களும் உமிழ்நீரைப் பயன்படுத்துவதைக் காணலாம். இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவுவதற்கான ஆபத்து உள்ளது.
எனவே, அனைத்து மாவட்ட அளவிலான அலுவலர்கள் (அபிவிருத்தி) / தொகுதி மேம்பாட்டு அலுவலர்கள் தொற்று, அதன் தொடர்பான தொற்று நோய்களைத் தவிர்ப்பதற்காக கோப்புகளின் பக்கத்தைத் திருப்புவதற்கு நீர் கடற்பாசிகளைப் பயன்படுத்துங்கள் என உத்தரவிடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: டன்-டனா- டன்னை முதலில் நிறுத்துங்கள்: சோன்பத்ரா தங்கச் சுரங்கம் குறித்த சசி தரூர் கிண்டல்!