ETV Bharat / bharat

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை ரூ. 41 கோடி நிதி - அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்

லக்னோ: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு இதுவரை ரூ. 41 கோடி நிதி கிடைத்துள்ளதாக கோயில் அறங்காவல் குழு தெரிவித்துள்ளது.

Ram
Ram
author img

By

Published : Aug 6, 2020, 9:17 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நேற்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இதில் பிரதமர் கலந்துகொண்டு கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று புதிய ராமர் கோயிலுக்கு ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா என்ற அறங்காவல் அமைப்பு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. கோயில் கட்டுமான பணிகள், நிதி, நிர்வாகம் ஆகியவற்றை இந்த அறங்காவல் குழு மேற்கொள்கிறது.

அதன்படி, புதிய கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியையும் இந்த குழு மேற்கொண்டுவருகிறது. தற்போதுவரை சுமார் 41 கோடி ரூபாய் நிதி கோயில் கட்டுமானத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அரங்காவல் குழுவின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார். மார்ச் 25ஆம் தேதி கரோனா லாக்டவுனுக்கு முன்னர் 4.60 கோடி ரூபாய் நிதி வசூலாகியிருந்த நிலையில், தற்போது அது 41 கோடியாக அதிகரித்துள்ளதாக குழு தெரிவிக்கிறது.

மேலும், ஆன்லைன் மூலம் இதுவரை 5 ஆயிரம் பேர் நிதியளித்துள்ளதாகவும், ஆன்லைன் பரிவர்த்தனை, காசோலை என அனைத்து முறைகளிலும் பணம் தங்களுக்கு வருவதாகவும் கூறியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து பணம் பெறுவதற்கு எஃப்.ஆர்.சி.ஏ சான்று பெறும் நடவடிக்கையில் குழு ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ள அறங்காவல் குழு, மாற்று மதத்தினரும் நிதி அளிக்க முன்வந்தால் அதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் விவசாயி ரயில் நாளை முதல் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.