புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு பயணிகள் விமானங்கள் தினமும் இயக்கப்பட்டுவந்தன. அதையடுத்து கரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது விமான சேவைகள் தொடங்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
அதனடிப்படையில், புதுச்சேரியிலிருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து புதுச்சேரி விமான நிலைய அலுவலர்கள், இந்த மாதம் புதுச்சேரியிலிருந்து விமானங்கள் இயக்க வாய்ப்பு குறைவு என்றும் ஜூன் மாதம் விமானங்களை இயக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் மது விற்பனை தொடக்கம்!