ETV Bharat / bharat

வாராணாசி மோடிக்கு கை கொடுக்குமா? - modi

மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதி மோடிக்கு கை கெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

modi
author img

By

Published : May 19, 2019, 9:07 AM IST

Updated : May 19, 2019, 9:37 AM IST

நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆறு கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், இன்று ஏழாம், இறுதிகட்ட வாக்குப்பதிவு ஏழு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

வாரணாசி 'கை' கூடுமா?

இன்றைய தேர்தலில் பல முக்கியத் தலைவர்களின் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில் குறிப்பாக பிரதமர் மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியும் அடங்கும். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அங்கு பெரிய அளவிலான வெற்றியைப் பதிவு செய்தார். பின்னர் அவர் பிரதமராகவும் பதவியேற்றார்.

எனவே இந்த வருடமும் மோடி இதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அஜய் ராய் சொற்ப வாக்குகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

யார் இந்த அஜய் ராய்... ஏன் காங்கிரஸ் அவரை மோடிக்கெதிராக களமிறக்குகிறது?

எனினும் இம்முறை மோடி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாகக் கருதி, அஜய் ராய் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் அவரை மீண்டும் களமிறக்கியுள்ளது. இவர் வாரணாசி தொகுதியில் ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அஜய் ராய்க்கு அத்தொகுதி மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் உள்ளது. இதனாலேயே காங்கிரஸ் மீண்டும் அவரை மோடிக்கு எதிராக இறக்கியுள்ளது எனத் தெரிகிறது.

முன்னதாக இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் உ.பி. கிழக்குப்பகுதி பொதுச்செயலாளரும், ராகுல் காந்தியின் தங்கையுமான பிரியங்கா களமிறக்கப்படலாம் என்ற செய்திகளும் உலா வந்தன. ஆனால், அது பின்னர் மாற்றியமைக்கப்பட்டது.

மோடியின் வெற்றிக்கு நெருக்கடி கொடுக்கும் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி

இதேபோன்று உ.பி.யில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சியின் மெகா கூட்டணியில் ஷாலினி யாதவ் களமிறக்கப்பட்டுள்ளார். இந்தக் கூட்டணிக்கும் இங்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இம்முறை மோடிக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Intro:Body:Conclusion:
Last Updated : May 19, 2019, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.