இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ப்பட்டாலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், டெல்லியில், ஆர்.எம்.எஸ் மருத்துவமனையில் செவிலி ஒருவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, அந்த மருத்துவ குழுவினர் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டை விட்டு 14 நாள்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை பின்பற்றாவிட்டால் பேரபாயம் - அரவிந்த் கெஜ்ரிவால்