ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த ஒருவர், வீட்டில் பிரஷ் செய்துக்கொண்டிருந்த நேரத்தில் தவறுதலாக பிரஷை விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து, உடனடியாக மருத்துவனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உணவுகுழாயில் பிரஷ் சிக்கிகொண்டிருப்பதை கண்டுப்பிடித்தனர்.
பின்னர், மருத்துவர் கில்ஜி, மருத்துவர் கபில் குப்தா ஆகிய இருவரும் எண்டோஸ்கோபி மூலம் பிரஷை அகற்ற திட்டமிட்டனர். அதன்படி, நோயாளிக்கு முதலில் மயக்க மருந்து வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அலிமென்டரி கால்வாயிலிருந்து (உணவுக்குழாய்) 10 முதல் 12 நிமிடங்களுக்குள் ஆறு செ.மீ நீளமுள்ள பிரஷை அகற்றினர். இதையடுத்து, அவர் சிகிச்சை முடிந்து மூன்று மணி நேரத்திற்குள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவர் கில்ஜி கூறுகையில், "அலிமெண்டரி கால்வாயிலிருந்து டூத் பிரஷ் எடுப்பது மிகவும் சவாலான பணியாக இருந்தது. பிரஷினால் அலிமென்டரி கால்வாயில் சேதமடையும் அபாயம் இருந்தது. இருப்பினும், பிரஷ் விழுங்கியதற்கான உண்மையான காரணங்கள் தெரியவில்லை" என்றார்.