மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவான்டி என்னும் பகுதியில் மருத்துவர் ஒருவர் சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 31ஆம் தேதியன்று தனது கிளினிக்கிற்கு வந்த 14 வயது சிறுமிக்கு சிகிச்சையளித்த மருத்துவர், அங்கு பணிபுரியும் ஊழியர்களை வெளியேறச் செய்து விட்டு, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் இன்று (ஆக. 8) காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், மருத்துவர் மீது காவல் துறையினர் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.