லக்னோ: ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை தராததால் மருத்துவமனை நிர்வாகம் தன்னை பணியிலிருந்து நீக்கியதாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ராஜேஸ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தன்னை இரண்டரை லட்சம் ரூபாய் நன்கொடை தரச்சொல்லி மிரட்டியவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மச்சாலி ஷாஹர்லுக்கு நெருக்கமானவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டரை லட்சம் ரூபாய் நன்கொடை தரமுடியாது என நான் மறுத்ததால், என்னுடைய இடத்தில் சந்தோஷ்குமார் என்ற மருத்துவரை பணியமர்த்தி தன்னை பணியிலிருந்து மருத்துவமனை நிர்வாகம் நீக்கியுள்ளதாக ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்துள்ள மக்களவை உறுப்பினர் மச்சாலி ஷாஹர்ல், டெல்லியில் நான் இருக்கிறேன். இந்த நிகழ்வுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இந்தச் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட காஞ்சி சங்கரமடம் மூலம் ரூ.6 கோடி நிதி ஒப்படைப்பு