நீங்கள் இப்போது கான்டாக்ட் லென்ஸை பயன்படுத்துபவராக இருந்தால், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அந்த லென்ஸ்கள் மூலம் கரோனா வைரஸ் நோய் பரவுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சூழலில், நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் மருத்துவ பள்ளியில் துணை பேராசிரியராக பணியாற்றிவரும் டேவிட் சூ சில ஆலோசனைகளை கூறியுள்ளார்.
கான்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துவதால் கரோனா வைரஸ் நோய் பரவாது என அவர் கூறியுள்ளார். இருப்பினும், லென்ஸ்கள் பயன்படுத்துவதால் கண்களுக்கு எரிச்சலூட்டும் உணர்வு ஏற்படும். அதனை பயன்படுத்துவோர் கண்களை தொடவும் தேய்க்கவும் வாய்ப்புண்டு.
இந்தப் பழக்கத்தினால் நோய் பரவும் அபாயம் ஏற்படும். பயன்படுத்தப்படும் லென்ஸ்கள் சுத்தமாக இருக்க வேண்டும். லென்ஸ்களை பயன்படுத்துவதற்கு முன்பு 20 விநாடிகளாவது கையை சோப் மூலம் சுத்தப்படுத்த வேண்டும். உலர்ந்த கைகள் மூலமாகவே லென்ஸ்களை தொட வேண்டும்.
- இந்தச் சூழலில், லென்ஸ்களுக்கு பதில் மூக்குக் கண்ணாடிகளை பயன்படுத்தலாம் என யாரும் பரிந்துரைப்பதில்லை. வைரஸ் பரவலால் எளிதில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள நபர்கள், பாதிக்கப்பட்டவருடன் இருக்கக் கூடியவர்கள் மூக்குக் கண்ணாடிகளை பயன்படுத்துவது நன்று.
- வழக்கத்திற்கு மாறாக, கண்ணீரில் கரோனா வைரஸ் தென்படுகிறது. கண்ணீர் மூலம் இந்நோய் பரவுகிறதா என்பது தெளிவாகவில்லை. இதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
- வழக்கமாக, திசு வீக்கத்தினாலும் ஒவ்வாமையாலும் வெண்படல அழற்சி ஏற்படுகிறது. கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு அரிதாகவே வெண்படல அழற்சி ஏற்படுகிறது.
- லென்ஸ்கள் பயன்படுத்துபவருக்கு கண்களில் புண்கள் ஏற்பட்டால், அதை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறினால், கண்கள் சார்ந்த பிரச்னை, தொற்று, பார்வை இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
- கண் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள். தூங்குவதற்கு முன்பு லென்ஸ்களை அகற்ற வேண்டும். அகற்றும் போதும் மீண்டும் பயன்படுத்தும்போதும் சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும். தொற்று ஏற்படாதவாறு சுத்தமான பகுதியில் லென்ஸ்களை வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: சென்னை நிலைமை மோசம் - உள்துறை அமைச்சகம்