ETV Bharat / bharat

பிராந்திய மக்களுக்கே முன்னுரிமை; வேலை வாய்ப்பின்மையை தீர்க்க முடியுமா? - Unemployment Problem at india

பிராந்திய வெறியிலிருந்து மக்களை வெளிக்கொணர ஒரேவழி பொருளாதார மீட்சி மட்டுமே. அது குறித்த சிறப்பு தொகுப்பு!

Unemployment
பிராந்திய மக்கள்
author img

By

Published : Dec 19, 2019, 6:38 AM IST

வேலைவாய்ப்பு முழுவதும் பிராந்திய மக்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்னும் கூக்குரல் பிராந்திய வெறி மீண்டும் தலைதுாக்குவதற்கான அறிகுறி மகாராஷ்ரத்தில் பதவியேற்றுள்ள புதிய அரசு வேலைவாய்ப்பில் 80% பிராந்திய மக்களுக்கே ஒதுக்கப்படும் என உறுதியாக கூறியுள்ளது. “ஆந்திர பிரதேச தொழிற்கூடங்களில் பிராந்திய மக்களுக்கான வேலைவாய்ப்பு சட்டம் 2019” சில மாதங்களுக்கு முன் ஆந்திர அரசு இயற்றியது. இச்சட்டத்தின் நோக்கம் பிராந்திய மக்களுக்கு வேலை வாய்ப்பில் 75% ஒதுக்கீடு செய்வதாகும். ஆந்திராவில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் இச்சட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தவேண்டும். உள்ளுர் மக்கள் போதுமான திறனற்றவர்களாக இருப்பின் தொழிற்சாலைகளே அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து வேலையில் அமர்த்திக் கொள்ளவேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் ஆந்திராவில் புதிய முதலீடுகள் மூலம் புதியதொழிற்சாலைகள் தொடங்குவது தடைபடுவதன் மூலம் வேலைவாய்ப்பு இழப்பும் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலையும் ஏற்படும் பிரக்சிட் (BREXIT) அமல்படுத்தியதன் மூலம் பிரிட்டனில் ஏற்பட்ட நிலையே இங்கும் ஏற்படும் இத்தகைய அரசியல் நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஆரம்பத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் காலப்போக்கில் வளர்ச்சியடையாத BIMRU மாநிலங்களுக்கிடையே வருமானத்திலும் வேலைவாய்ப்புகளிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்பது நிச்சயம். இந்தியாவின் 20 விழுக்காடு அதாவது 100 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து வேலை செய்யக்கூடியவர்கள் அதனால் பிராந்திய மக்கள் வேலைத்திறன் குறைபாடு உள்ளவர்களாக இருந்தால் தொழிற்சாலைகள் இலாபத்தை குறைவாகவே பெறக்கூடும்.

உண்மையிலேயே 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு மாநில நிவாரணத் தொகையை பெற வேண்டுமானால் தொழிற்சாலைகள் 80 விழுக்காடு பிராந்திய மக்களை வேலையில் அமர்த்த நிர்பந்தப்படுத்தப்பட்டார்கள். ஆனால் போதுமான வேலைத்திறன் பெற்றவர்கள் கிடைக்காததால் இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதுபோலவே 2016 ஆம் ஆண்டு கர்நாடக அரசு 100 விழுக்காடு வேலைவாய்ப்பு பிராந்திய மக்களுக்கே என்று அறிவித்த நடவடிக்கை சட்டத்துறையால் அரசியலமைப்பிற்கு முரணானது என மறுத்தாணையிடப்பட்டது.

மத்திய பிரதேச அரசும் இதுபோன்றதொரு சட்டம் இயற்ற யோசித்து வருகிறது. அடுத்து கோவா மற்றும் ஒடிசா அரசுகளும் இத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம். மகாராஷ்டிராவும் அசாமும் இத்தகைய கோரிக்கைகளை முன்னிறுத்தி நடந்த போராட்டங்களை கடந்த 10 ஆண்டுகளாவே சந்தித்து வருகின்றன. பல மாநிலங்களும் இத்தகைய நிலைப்பாட்டை எடுக்க ஆரம்பித்தபிறகு இடம்பெயர்ந்து வேலைசெய்யக்கூடியவர்களால் ஏற்பட்ட திசைமாற்றமானது பொருளாதாரத்தில் ஒரு தடம் பதித்து சென்றது. இதன் விளைவாக வட இந்தியாவிலிருந்து தென்இந்தியா நோக்கி வேலைதேடி அதிகளவில் மக்கள் வரத்தொடங்கியுள்ளனர். இத்தகைய வட இந்தியர்கள் வேலைதேடி தென்னிந்தியா நோக்கி வருவதை தென்னிந்திய மக்கள் கடுமையாக இல்லாது போனாலும் ஓரளவு எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இத்தகைய சிந்தனையோடு அடுத்து வரக்கூடிய மாநிலம் கர்நாடகம், தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை பிராந்திய மக்களைக்கொண்டு நிரப்பும் பொருட்டு பிராந்திய மக்களின் வேலைத்திறனை உயர்த்தும் பயிற்சியளித்து வருகிறது. இத்தகைய செயல்பாட்டை கர்நாடக முதல்வர் தனது இந்திய விடுதலை நாள் விழா உறையில் கூறியிருந்தார்.

போலி நாட்டுப்பற்று அரசியல் அரிதாகவே புள்ளி விவரங்களை சார்ந்து இருக்கிறது. ஆனால் தற்போதைய விடயத்தில் போதுமான ஆதாரங்களைக் கொண்டு இந்தியாவில் மாறிவரும் மக்களின் இடப்பெயர்ச்சியை நிரூபிக்க விரும்போருக்கு சென்ற மாதம் வரை போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றே கூறலாம். 2000 ஆண்டுகளில் இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சி பெருமளவு உயர்ந்திருந்தபோதிலும் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வேலை தேடி இடம் பெயர்தல் அந்தந்த மாநிலத்திற்குள்ளேயே நடைபெற்றுள்ளது. பிராந்தியவெறிக்கு எதிரான பாதுகாப்பு நமது அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் பேணி பாதுகாக்கப்படுகிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரும் புள்ளி விவரங்கள் இடப் பெயர்ச்சி விடயத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை தெளிவாக விளக்குகிறது. மத்திய இந்தி பேசும் மாநில மக்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு கடற்கரை நகரங்களை நோக்கி பெருமளவில் நகர்வதோடல்லாமல் புதிய எழுச்சி பெறும் தென்மாநிலங்களை நோக்கியும் நகரத் தொடங்கியுள்ளனர். வேலை வாய்ப்பை மட்டுமல்லாது சிறந்த கல்வி கற்கும் வாய்ப்புகளையும் தேடி இந்தியர்கள் மாநில எல்லைகளை கடக்கத் தொடங்கியுள்ளனர். இத்தகைய புதிய வழித்தடங்களில் இடம் மாறும் இந்தியர்களின் எண்ணிக்கை பல்வேறு மாவட்டங்களில் பத்தில் ஒன்றாகவே உள்ளது. அதாவது சுமார் 10 விழுக்காடு மக்களே வேலைதேடி மாநிலம் விட்டு இடம் பெயர்ந்து செல்கின்றனர். பிராந்திய மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற கோட்பாட்டை கடைப்பிடிக்கும் மத்திய பிரதேசத்தில் 5 விழுக்காடு மக்களே இடம் பெயர்ந்து உள்ளனர்.

மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்ச்சி:

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுதந்திரமான இயக்கத்திற்கு உத்தரவாதம் அளிப்பதன்மூலம் வேலைவாய்ப்பிற்கும் உத்தரவாதம் அளித்துள்ளது. பிரிவு 19-இன் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்தியாவின் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவர உரிமை அளித்துள்ளது. பிரிவு 16-படி எந்த ஒரு குடிமகனும் பிறந்த இடத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பில் சாதகமாகவோ, பாதகமாகவோ நடத்தப்படக்கூடாது என்ற உத்தரவாதம் அளித்துள்ளது. பிரிவு 15 பிறப்பிடத்தின் அடிப்படையில் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு எதிராக பாதுகாப்பளிக்கிறது. அதுபோலவே பிரிவு-14 இன் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் அவர்கள் இந்தியாவின் எந்த பகுதியில் பிறந்திருந்தாலும் மேற்கூறிய ஒரு சில அரவியலமைப்பின் பிரிவுகளின் படி 2014-ஆம் ஆண்டு நடந்த சாரு குரானா என்பவரின் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் எந்த ஒரு குடிமகனின் உரிமையும் பிறந்த இடத்தின் அடிப்படையில் மறுக்கப்படக்கூடாது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. சாரு குரானா என்ற ஒப்பனைக் கலைஞர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மகாராஷ்டிரத்தில் வசிக்கவில்லை என்ற தொழிற்சங்க விதிகளை காரணம்காட்டி தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராகும் உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. சமீபத்தில் ஆந்திர அரசால் இயற்றப்பட்ட சட்டமும் கூட அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் எதிர்க்கலாம் என்பது மட்டுமல்ல கட்டாயம் எதிர்க்கவேண்டும் என்பதே சரியாகும்.

அரசியலைப்பு பாதுகாப்பு ஒருபுறம் இருக்க மாநிலங்களுக்கிடையே நடைபெறும் இடம்பெயர்வோர் எண்ணிக்கையின் அடிப்படையிலும் பிராந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பில் வழங்கப்படும் முன்னுரிமை சட்டத்தை எதிர்க்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில்லா இடப்பெயர்ச்சி வழக்கமாக குறைத்து மதிப்பிடப்படுகிறது ஏனெனில் அத்தகை மதிப்பீடுகள் குறைந்த கால இடப்பெயர்ச்சிகளையும் வட்டவடிவ இடப்பெயர்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் வளர்ச்சி விகிதங்கள் மற்றும் ஒப்பீட்டு விகிதாச்சாரங்கள் மூலம் அனுமானங்களை உருவாக்க முடியும்.

வடக்கு – தெற்கு இடைவழி:

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வடக்கு – தெற்கு இடைவழி உருவாகி இருப்பது தெளிவு. ஒருபுறம் உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்க மாநிலங்கள் அடங்கிய ஒரு கூட்டமைப்பாகவும் மறுபுறம் கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஒரு கூட்டமைப்பாகவும் எடுத்துக் கொண்டால் 85% இடப்பெயர்ச்சி தெற்கு நோக்கியே நகர்ந்துள்ளது. 2011 முதல் இந்த வடக்கு-தெற்கு இடைவழி வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த வளர்ச்சியை 2021 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு உறுதி செய்யும்.

2001-க்கும் 2011-க்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்ச்சி 11.6 மில்லியனிலிருந்து 13 மில்லியனாக உயர்ந்திருக்கிறது. இதில் நகர்ப்புற வேலை தேடுவோரின் இப்பெயர்ச்சியானது 8% அளவிலேயே இருந்தபோதிலும் ஒரு சில மாநிலங்களில் இந்த இடப்பெயர்ச்சி சற்று கூடுதலாகவே உள்ளது.

நேஷ்னல் சேம்பிள் சர்வே ஆபிஸ் (NSSO) வேலைவாய்ப்பு சர்வே படி 45 ஆண்டுகளில் இல்லாத உயர் அளவிலான 6.1% வேலை இல்லா திண்டாட்டம் 2017-18 இல் நிலவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதி செய்யப்படாத சர்வே நிலவரப்படி 2017-2018 ஆம் ஆண்டு 11 மாநிலங்கள் அதாவது 1/3 இந்திய மாநிலங்களில் வேலைவாய்ப்பு இன்மை தேசிய அளவை விட கூடுதலாகவே இருந்துள்ளது.

2017-ஆம் ஆண்டு பொருளாதார சர்வே படி மாநிலங்களுக்கு இடையேயான வேலைதேடி இடம் பெயர்வோர் ஆண்டு சராசரி சுமார் 9 மில்லியன். இது 2011-116 ஆண்டுகளுக்கு இடையே காணப்பட்ட ஆண்டு சராசரியாகும். இந்தி பேசும் மாநிலங்களான உத்தரபிரதேசம் பிகார் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களிலிருந்து பெருமளவு இடப்பெயர்ச்சியானது டெல்லி குஜராத் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி, 1991-க்கும் 2001-க்கும் இடைபட்ட காலத்தில் ஏற்பட்ட மாநிலத்திற்குள்ளே மாவட்டங்களுக்கு இடையே ஏற்பட்ட இடப்பெயர்ச்சி 30% இருந்து 2001-க்கும் 2011-க்கும் இடைப்பட்ட காலத்தில் 58% உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவான 93.91% கல்வி அறிவு பெற்றவர்களை கொண்ட மாநிலமான கேரளா 2011 மக்கள் தொகை கணக்கின் படி இந்தியாவில் அதிக அளவான 11.4% வேலையற்றோர் இருந்துள்ளனர். அது போலவே 2017-ஆம் ஆண்டு பொருளாதார சர்வே படி மாநிலத்திற்கு உள்ளேயே ஏற்படும் இடப்பெயர்ச்சியும் உயர்ந்து வந்துள்ளது. இது குறைவான வேலைத்திறன் கொண்டோர் பிராந்திய மக்களை பிற பிராந்தியங்களுக்கு இடம் பெயரச் செய்வதன் வெளிப்பாடாகத்தான் இது இருக்க வேண்டும்.

உண்மையான வேலை வாய்ப்புகளை அந்த பிராந்தியத்தில் நிறுவப்படும் தொழிற்சாலைகளே உருவாக்கமுடியும் அன்றி சட்டத்தினால் அல்ல. காலப்போக்கில் அரசாங்கம் வழங்கும் உதவித்தொகையோ இட ஒதுக்கீடுகளோ நிரந்தர வளர்ச்சிக்கு வழிவகுக்காது. தற்போதைய தேவை என்பது எளிய முதலீட்டாருக்கு உதவும் கொள்கைகள் திறன்வளர்ப்பு நிம்மதியாக தொழில் செய்யும் சூழலே ஆகும்.

சட்டத்தை இயற்றுவதற்கும் அதனை செயல்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். ஆந்திராவில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தில் கூட உரம் நிலக்கறி மருந்து உற்பத்தி பெட்ரோலியம் மற்றும் சிமெண்ட் போன்ற தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது தகவல் தொழில் நுட்பத்துறைக்கு விரிவுபடுத்தப்படாது என்றே நம்புவோம்.

சிறிய மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களான டெல்லி சண்டிகர் அல்லது டாமன் போன்றவற்றில் மொத்த உடைப்பவர்களில் 40 பேர் வேலை தேடி இடம் பெயரக்கூடியவர்களாகும். மும்பையை பொறுத்தவரை இது 24% ஆனால் பெங்களுாரு சென்னை ஐதராபாத் போன்ற பெரு நகரங்களில் இது 15% குறைவாகும்.

இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்கள் 640 இல் 410 மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக தென்னிந்திய மாவட்டங்களில் இத்தகைய இடப்பெயர்ச்சியானது 5% குறைவு தமிழகத்தின் மிக முக்கயமான உற்பத்திக் கூடங்கள் அமைந்துள்ள திருப்புர் போன்ற மாவட்டங்களுக்கு தேவையான தொழிலாளர்கள் மாநிலத்தின் பிறமாவட்டங்களில் இருந்தே இடம் பெயர்கின்றனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நகரங்களில் உள்ள தொழிலாளர்களை பிறமாநில நகரங்களுக்கு பணிநிமித்தம் இடம் பெயர்தல் சராசரியாக 10% குறைவு. இந்த புள்ளி விவரம் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டதாக கருதினாலும் அதிகபட்சமாக இது 20% நகர தொழிலாளர்களாகத் தான் இருக்க முடியும். நகரதொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி தொழிலாளர் சந்தையை மூழ்கடிக்கிறது என்ற கூக்குரலுக்கு எதிர்மாறாக உள்ளது என்பதே உண்மை.

மாநிலங்கள் பிராந்திய வெறியை ஊக்குவிப்தற்கு பதில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதன்மூலம் மாநிலங்களுக்கு இடையே பாதுகாப்பான தொழிலாளர் இடப்பெயர்ச்சியை எளிடையாக்கலாம். இதன் மூலம் சமூக பாதுகாப்பு பலன்களை அனைவரும் பெறும் படியான நிதி ஆதாரங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாநிலங்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பெருகும். தடைகளற்ற தொழில்செய்வதற்கான சூழலை உருவாக்குவதே தற்போதைய மத்திய அரசின் கொள்கை முடிவாக உள்ள நிலையில் நாடெங்கும் சமமான திறன் உள்ள தொழிலாளர்கள் கிடைக்கும் நிலையில் இது சாத்தியமாகும்.

ஆர்வமூட்டும் ஆந்திர நிலை

மாநிலங்களுக்கு இடையேயான தொழிலாளர் இடப்பெயர்ச்சிக்கு நமது அரவயலமைப்புச்சட்டம் பாதுகாப்பு அளித்து உள்ள நிலையில் ஆந்திர அரசு போன்று பிற மாநிலஙாகள் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்ப்பதும் பிராந்திய தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை இயற்றுவதும் புரியாத புதிராகவே உள்ளது.

அண்டை மாநிலமான தெலுங்கானா இத்தகைய ஒரு சட்டத்தை இயற்ற முற்பட்டால் அதனால் பாதிப்பு அடையப்போவது ஆந்திரா மட்டுமே ஏனெனில் அத்தகைய சட்டம் இயற்றப்படுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி கண்ட ஐதராபாத் மாநகரை ஆந்திர தொழிலாளர்கள் நெருங்க முடியாத ஒரு நிலை ஏற்படலாம். புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் பொருளாதார காரணங்களுக்காக நடைபெறும் இடப்பெயர்ச்சியானது பெருமளவில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளேயே நடைபெற்றுள்ளது. ஒரு மிகச் சிறிய அளவு நகர்ப்புற தொழிலாளர்கள் மட்டுமே வெளியிலிருந்து வந்து உள்ளனர்.

இத்தயை சூழலில் பிராந்திய தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்படும் சட்டங்கள் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை ஆனாலும் இதுபோன்ற சட்டங்கள் தேவையா என்ற வினாவே முதலில் எழுகிறது. ஆந்திர மாநிலம் ஒரு அபாயகரமான் முன்னுதாரணம் ஏற்படுத்திய நிலையில் மற்ற மாநிலங்களும் இதை பின்பற்ற ஆரம்பித்தால் அனைத்து மாநிலங்களும் ஒன்றாக அழிவை நோக்கியே பயணிக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் பொருளாதார சுணக்கம் ஏற்படும் காலங்களில் இது போன்ற பிராந்திய பாதுகாப்பு கூக்குரல்கள் எழுவது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. பொருளாதார மந்த நிலைக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் பார்க்கப்பட வேண்டும். இது போன்ற பிராந்திய பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமானால் இந்திய பொருளாதரம் வெகுவிரைவில் பழைய வளர்ச்சி நிலையை அடைதல் வேண்டும்.

2017-ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான தொழிலாளர் இடப்பெயர்ச்சி மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆனாலும் ஒருங்கிணைந்த தொழிலாளர் சந்தையை உருவாக்குவதில் இந்தியா பின்தங்கியே உள்ளது. ஓட்டு வங்கி அரசியல் செய்யும் மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநில முதல்வர்களும் மகாராஷ்ராவின் சிவசேனா தலைவர்களும் பிராந்திய மக்களின் வேலை வாய்ப்பை இடம் பெயர்ந்தோர் அபகரிக்கின்றனர் என்ற வாதத்தை மிகைப்படுத்துகின்றனர். உண்மை என்னவெனில் இத்தகைய உளநாட்டு தொழிலாளர் இடப்பெயர்ச்சியால் இந்தியா பெருமளவில் நன்மை பெறும்.

தேசிய தலைநகரத்தில் நடைபெறும் கட்டுமானங்கள் மத்தியபிரதேசம் போன்ற பிற மாநிலங்களில் இருந்து இடம் பெயரும் தொழிலாளர்களை ஈர்க்கின்றன ஏனெனில் பிராந்திய மக்கள் இத்தகைய வேலைகளை செய்ய முன்வருவதில்லை. விவசாயத் தொழிலாளர்களையும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள் ஈர்க்கின்றன. வீட்டு வேலைகளுக்கான இடம் பெயர் தொழிலாளர்கள் இல்லாவிட்டால் பெருநகரங்களில் இவ்வேலைகள் பெரிதும் பாத்க்கப்படும் என்பது தெளிவு.

எந்த ஒரு பெரிய நாட்டிலும் நடைபெறும் முன்னேற்றமும் வளர்ச்சியும் அந்த நாட்டில் நடைபெறும் தொழிலாளர் இடப்பெயர்ச்சியின் மூலமே நடைபெற்று நிச்சயமான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதற்கான காரணங்கள் எளிமையானவை எங்கே தொழிலாளர் இடப்பெயா்ச்சி அதிகமாக உள்ளதோ அங்கே தொழிலாளர் சந்தையும் – வேலைக்கான தேவையும் சமமாக இருப்பதன் மூலம் வேலையின்மை நிலவரம் சீராக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி ஏற்படுகின்றது.

இதையும் படிங்க: பொருளாதார மறுமலர்ச்சிக்கு வலுவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்!

Intro:Body:

பிராந்திய மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுப்பதன் மூலம் வேலை வாய்ப்பின்மை பிரச்சினையை தீர்க்க முடியுமா?

பிராந்திய வெறியிலிருந்து மக்களை வெளிக்கொணர ஒரேவழி பொருளாதார மீட்சி மட்டுமே.

வேலைவாய்ப்பு முழுதும் பிராந்திய மக்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்னும் கூக்குரல் பிராந்திய வெறி மீண்டும் தலைதுாக்குவதற்கான அறிகுறி மகாராஷ்ரத்தில் பதவியேற்றுள்ள புதிய அரசு வேலைவாய்ப்பில் 80% பிராந்திய மக்களுக்கே ஒதுக்கப்படும் என உறுதியாக கூறியுள்ளது.  “ஆந்திர பிரதேச தொழிற்கூடங்களில் பிராந்திய மக்களுக்கான வேலைவாய்ப்பு சட்டம் 2019” சில மாதங்களுக்கு முன் ஆந்திர அரசு இயற்றியது. இச்சட்டத்தின் நோக்கம் பிராந்திய மக்களுக்கு வேலை வாய்ப்பில் 75% ஒதுக்கீடு செய்வதாகும். ஆந்திராவில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் இச்சட்டத்தை 3 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தவேண்டும்.  உள்ளுர் மக்கள் போதுமான திறனற்றவர்களாக இருப்பின் தொழிற்சாலைகளே அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து வேலையில் அமர்த்திக் கொள்ளவேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் ஆந்திராவில் புதிய முதலீடுகள் மூலம் புதியதொழிற்சாலைகள் தொடங்குவது தடைபடுவதன் மூலம் வேலைவாய்ப்பு இழப்பும் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலையும் ஏற்படும் பிரக்சிட் (BREXIT) அமல்படுத்தியதன் மூலம் பிரிட்டனில் ஏற்பட்ட நிலையே இங்கும் ஏற்படும் இத்தகைய அரசியல் நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஆரம்பத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.  ஆனால் காலப்போக்கில் வளர்ச்சியடையாத BIMRU மாநிலங்களுக்கிடையே வருமானத்திலும் வேலைவாய்ப்புகளிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்பது நிச்சயம். இந்தியாவின் 20% அதாவது 100 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து வேலை செய்யக்கூடியவர்கள் அதனால் பிராந்திய மக்கள் வேலைத்திறன் குறைபாடு உள்ளவர்களாக இருந்தால் தொழிற்சாலைகள் இலாபத்தை குறைவாகவே பெறக்கூடும்.

உண்மையிலேயே 2008-ஆம் ஆண்டே மகாராஷ்டிர அரசு மாநில நிவாரணத் தொகையை பெற வேண்டுமானால் தொழிற்சாலைகள் 80% பிராந்திய மக்களை வேலையில் அமர்த்த நிர்பந்தப்படுத்தப்பட்டார்கள்.  ஆனால் போதுமான வேலைத்திறன் பெற்றவர்கள் கிடைக்காததால் இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதுபோலவே 2016-ஆம் ஆண்டு கர்நாடக அரசு 100% வேலைவாய்ப்பு பிராந்திய மக்களுக்கே என்று அறிவித்த நடவடிக்கை சட்டத்துறையால் அரசியலமைப்பிற்கு முரணானது என மறுத்தாணையிடப்பட்டது.

மத்திய பிரதேச அரசும் இதுபோன்றதொரு சட்டம் இயற்ற யோசித்து வருகிறது.  அடுத்து கோவா மற்றும் ஒடிசா அரசுகளும் இத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம்.  மகாராஷ்டிராவும் அசாமும் இத்தகைய கோரிக்கைகளை முன்னிறுத்தி நடந்த போராட்டங்களை கடந்த 10 ஆண்டுகளாவே சந்தித்து வருகின்றன.  பல மாநிலங்களும் இத்தகைய நிலைப்பாட்டை எடுக்க ஆரம்பித்தபிறகு இடம்பெயர்ந்து வேலைசெய்யக்கூடியவர்களால் ஏற்பட்ட திசைமாற்றமானது பொருளாதாரத்தில் ஒரு தடம் பதித்து சென்றது.  இதன் விளைவாக வட இந்தியாவிலிருந்து தென்இந்தியா நோக்கி வேலைதேடி அதிகளவில் மக்கள் வரத்தொடங்கியுள்ளனர். இத்தகைய வட இந்தியர்கள் வேலைதேடி தென்னிந்தியா நோக்கி வருவதை தென்னிந்திய மக்கள் கடுமையாக இல்லாது போனாலும் ஓரளவு எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இத்தகைய சிந்தனையோடு அடுத்து வரக்கூடிய மாநிலம் கர்நாடகம், தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை பிராந்திய மக்களைக்கொண்டு நிரப்பும் பொருட்டு பிராந்திய மக்களின் வேலைத்திறனை உயர்த்தும் பயிற்சியளித்து வருகிறது.  இத்தகைய செயல்பாட்டை கர்நாடக முதல்வர் தனது இந்திய விடுதலை நாள் விழா உறையில் கூறியிருந்தார்.

போலி நாட்டுப்பற்று அரசியல் அரிதாகவே புள்ளி விவரங்களை சார்ந்து இருக்கிறது.  ஆனால் தற்போதைய விடயத்தில் போதுமான ஆதாரங்களைக் கொண்டு இந்தியாவில் மாறிவரும் மக்களின் இடப்பெயர்ச்சியை நிரூபிக்க விரும்போருக்கு சென்ற மாதம் வரை போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.  2000 ஆண்டுகளில் இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சி பெருமளவு உயர்ந்திருந்தபோதிலும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வேலை தேடி இடம் பெயர்தல் அந்தந்த மாநிலத்திற்குள்ளேயே நடைபெற்றுள்ளது. பிராந்தியவெறிக்கு எதிரான பாதுகாப்பு நமது அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் பேணி பாதுகாக்கப்படுகிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரும் புள்ளி விவரங்கள் இடப் பெயர்ச்சி விடயத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை தெளிவாக விளக்குகிறது.  மத்திய இந்தி பேசும் மாநில மக்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு கடற்கரை நகரங்களை நோக்கி பெருமளவில் நகர்வதோடல்லாமல் புதிய எழுச்சி பெறும் தென்மாநிலங்களை நோக்கியும் நகரத் தொடங்கியுள்ளனர்.  வேலை வாய்ப்பை மட்டுமல்லாது சிறந்த கல்வி கற்கும் வாய்ப்புகளையும் தேடி இந்தியர்கள் மாநில எல்லைகளை கடக்கத் தொடங்கியுள்ளனர். இத்தகைய புதிய வழித்தடங்களில் இடம் மாறும் இந்தியர்களின் எண்ணிக்கை பல்வேறு மாவட்டங்களில் பத்தில் ஒன்றாகவே உள்ளது.  அதாவது சுமார் 10% மக்களே வேலைதேடி மாநிலம் விட்டு இடம் பெயர்ந்து செல்கின்றனர். பிராந்திய மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற கோட்பாட்டை கடைப்பிடிக்கும் மத்திய பிரதேசத்தில் 5% மக்களே இடம் பெயர்ந்து உள்ளனர்.

மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்ச்சி:

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுதந்திரமான இயக்கத்திற்கு உத்தரவாதம் அளிப்பதன்மூலம் வேலைவாய்ப்பிற்கும் உத்தரவாதம் அளித்துள்ளது.  பிரிவு 19-இன் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்தியாவின் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவர உரிமை அளித்துள்ளது. பிரிவு 16-படி எந்த ஒரு குடிமகனும் பிறந்த இடத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பில் சாதகமாகவோ, பாதகமாகவோ நடத்தப்படக்கூடாது என்ற உத்தரவாதம் அளித்துள்ளது.  பிரிவு 15 பிறப்பிடத்தின் அடிப்படையில் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு எதிராக பாதுகாப்பளிக்கிறது. அதுபோலவே பிரிவு-14 இன் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் அவர்கள் இந்தியாவின் எந்த பகுதியில் பிறந்திருந்தாலும் மேற்கூறிய ஒரு சில அரவியலமைப்பின் பிரிவுகளின் படி 2014-ஆம் ஆண்டு நடந்த சாரு குரானா என்பவரின் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் எந்த ஒரு குடிமகனின் உரிமையும் பிறந்த இடத்தின் அடிப்படையில் மறுக்கப்படக்கூடாது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது.  சாரு குரானா என்ற ஒப்பனைக் கலைஞர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மகாராஷ்டிரத்தில் வசிக்கவில்லை என்ற தொழிற்சங்க விதிகளை காரணம்காட்டி தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராகும் உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. சமீபத்தில் ஆந்திர அரசால் இயற்றப்பட்ட சட்டமும் கூட அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் எதிர்க்கலாம் என்பது மட்டுமல்ல கட்டாயம் எதிர்க்கவேண்டும் என்பதே சரியாகும்.

அரசியலைப்பு பாதுகாப்பு ஒருபுறம் இருக்க மாநிலங்களுக்கிடையே நடைபெறும் இடம்பெயர்வோர் எண்ணிக்கையின் அடிப்படையிலும் பிராந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பில் வழங்கப்படும் முன்னுரிமை சட்டத்தை எதிர்க்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில்லா இடப்பெயர்ச்சி வழக்கமாக குறைத்து மதிப்பிடப்படுகிறது ஏனெனில் அத்தகை மதிப்பீடுகள் குறைந்த கால இடப்பெயர்ச்சிகளையும் வட்டவடிவ இடப்பெயர்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.  ஆனால் வளர்ச்சி விகிதங்கள் மற்றும் ஒப்பீட்டு விகிதாச்சாரங்கள் மூலம் அனுமானங்களை உருவாக்க முடியும்.

வடக்கு – தெற்கு இடைவழி:

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வடக்கு – தெற்கு இடைவழி உருவாகி இருப்பது தெளிவு.  ஒருபுறம் உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்க மாநிலங்கள் அடங்கிய ஒரு கூட்டமைப்பாகவும் மறுபுறம் கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஒரு கூட்டமைப்பாகவும் எடுத்துக் கொண்டால் 85% இடப்பெயர்ச்சி தெற்கு நோக்கியே நகர்ந்துள்ளது.  2011 முதல் இந்த வடக்கு-தெற்கு இடைவழி வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த வளர்ச்சியை 2021 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு உறுதி செய்யும்.

2001-க்கும் 2011-க்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்ச்சி 11.6 மில்லியனிலிருந்து 13 மில்லியனாக உயர்ந்திருக்கிறது.  இதில் நகர்ப்புற வேலை தேடுவோரின் இப்பெயர்ச்சியானது 8% அளவிலேயே இருந்தபோதிலும் ஒரு சில மாநிலங்களில் இந்த இடப்பெயர்ச்சி சற்று கூடுதலாகவே உள்ளது.

நேஷ்னல் சேம்பிள் சர்வே ஆபிஸ் (NSSO) வேலைவாய்ப்பு சர்வே படி 45 ஆண்டுகளில் இல்லாத உயர் அளவிலான 6.1% வேலை இல்லா திண்டாட்டம் 2017-18 இல் நிலவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உறுதி செய்யப்படாத சர்வே நிலவரப்படி 2017-2018 ஆம் ஆண்டு 11 மாநிலங்கள் அதாவது 1/3 இந்திய மாநிலங்களில் வேலைவாய்ப்பு இன்மை தேசிய அளவை விட கூடுதலாகவே இருந்துள்ளது.

2017-ஆம் ஆண்டு பொருளாதார சர்வே படி மாநிலங்களுக்கு இடையேயான வேலைதேடி இடம் பெயர்வோர் ஆண்டு சராசரி சுமார் 9 மில்லியன்.  இது 2011-116 ஆண்டுகளுக்கு இடையே காணப்பட்ட ஆண்டு சராசரியாகும். இந்தி பேசும் மாநிலங்களான உத்தரபிரதேசம் பிகார் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களிலிருந்து பெருமளவு இடப்பெயர்ச்சியானது டெல்லி குஜராத் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்துள்ளது.  2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி, 1991-க்கும் 2001-க்கும் இடைபட்ட காலத்தில் ஏற்பட்ட மாநிலத்திற்குள்ளே மாவட்டங்களுக்கு இடையே ஏற்பட்ட இடப்பெயர்ச்சி 30% இருந்து 2001-க்கும் 2011-க்கும் இடைப்பட்ட காலத்தில் 58% உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவான 93.91% கல்வி அறிவு பெற்றவர்களை கொண்ட மாநிலமான கேரளா 2011 மக்கள் தொகை கணக்கின் படி இந்தியாவில் அதிக அளவான 11.4% வேலையற்றோர் இருந்துள்ளனர்.  அது போலவே 2017-ஆம் ஆண்டு பொருளாதார சர்வே படி மாநிலத்திற்கு உள்ளேயே ஏற்படும் இடப்பெயர்ச்சியும் உயர்ந்து வந்துள்ளது. இது குறைவான வேலைத்திறன் கொண்டோர் பிராந்திய மக்களை பிற பிராந்தியங்களுக்கு இடம் பெயரச் செய்வதன் வெளிப்பாடாகத்தான் இது இருக்க வேண்டும்.

உண்மையான வேலை வாய்ப்புகளை அந்த பிராந்தியத்தில் நிறுவப்படும் தொழிற்சாலைகளே உருவாக்கமுடியும் அன்றி சட்டத்தினால் அல்ல.  காலப்போக்கில் அரசாங்கம் வழங்கும் உதவித்தொகையோ இட ஒதுக்கீடுகளோ நிரந்தர வளர்ச்சிக்கு வழிவகுக்காது. தற்போதைய தேவை என்பது எளிய முதலீட்டாருக்கு உதவும் கொள்கைகள் திறன்வளர்ப்பு நிம்மதியாக தொழில் செய்யும் சூழலே ஆகும்.

சட்டத்தை இயற்றுவதற்கும் அதனை செயல்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.  ஆந்திராவில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தில் கூட உரம் நிலக்கறி மருந்து உற்பத்தி பெட்ரோலியம் மற்றும் சிமெண்ட் போன்ற தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த சட்டமானது தகவல் தொழில் நுட்பத்துறைக்கு விரிவுபடுத்தப்படாது என்றே நம்புவோம்.

சிறிய மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களான டெல்லி சண்டிகர் அல்லது டாமன் போன்றவற்றில் மொத்த உடைப்பவர்களில் 40 பேர் வேலை தேடி இடம் பெயரக்கூடியவர்களாகும். மும்பையை பொறுத்தவரை இது 24% ஆனால் பெங்களுாரு சென்னை ஐதராபாத் போன்ற பெரு நகரங்களில் இது 15% குறைவாகும்.

இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்கள் 640 இல் 410 மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக தென்னிந்திய மாவட்டங்களில் இத்தகைய இடப்பெயர்ச்சியானது 5% குறைவு தமிழகத்தின் மிக முக்கயமான உற்பத்திக் கூடங்கள் அமைந்துள்ள திருப்புர் போன்ற மாவட்டங்களுக்கு தேவையான தொழிலாளர்கள் மாநிலத்தின் பிறமாவட்டங்களில் இருந்தே இடம் பெயர்கின்றனர்.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நகரங்களில் உள்ள தொழிலாளர்களை பிறமாநில நகரங்களுக்கு பணிநிமித்தம் இடம் பெயர்தல் சராசரியாக 10% குறைவு. இந்த புள்ளி விவரம் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டதாக கருதினாலும் அதிகபட்சமாக இது 20% நகர தொழிலாளர்களாகத் தான் இருக்க முடியும். நகரதொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி தொழிலாளர் சந்தையை மூழ்கடிக்கிறது என்ற கூக்குரலுக்கு எதிர்மாறாக உள்ளது என்பதே உண்மை.

மாநிலங்கள் பிராந்திய வெறியை ஊக்குவிப்தற்கு பதில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதன்மூலம் மாநிலங்களுக்கு இடையே பாதுகாப்பான தொழிலாளர் இடப்பெயர்ச்சியை எளிடையாக்கலாம்.  இதன் மூலம் சமூக பாதுகாப்பு பலன்களை அனைவரும் பெறும் படியான நிதி ஆதாரங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாநிலங்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பெருகும்.  தடைகளற்ற தொழில்செய்வதற்கான சூழலை உருவாக்குவதே தற்போதைய மத்திய அரசின் கொள்கை முடிவாக உள்ள நிலையில் நாடெங்கும் சமமான திறன் உள்ள தொழிலாளர்கள் கிடைக்கும் நிலையில் இது சாத்தியமாகும்.

ஆர்வமூட்டும் ஆந்திர நிலை

மாநிலங்களுக்கு இடையேயான தொழிலாளர் இடப்பெயர்ச்சிக்கு நமது அரவயலமைப்புச்சட்டம் பாதுகாப்பு அளித்து உள்ள நிலையில் ஆந்திர அரசு போன்று பிற மாநிலஙாகள் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்ப்பதும் பிராந்திய தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை இயற்றுவதும் புரியாத புதிராகவே உள்ளது.

அண்டை மாநிலமான தெலுங்கானா இத்தகைய ஒரு சட்டத்தை இயற்ற முற்பட்டால் அதனால் பாதிப்பு அடையப்போவது ஆந்திரா மட்டுமே ஏனெனில் அத்தகைய சட்டம் இயற்றப்படுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி கண்ட ஐதராபாத் மாநகரை ஆந்திர தொழிலாளர்கள் நெருங்க முடியாத ஒரு நிலை ஏற்படலாம்.  புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் பொருளாதார காரணங்களுக்காக நடைபெறும் இடப்பெயர்ச்சியானது பெருமளவில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளேயே நடைபெற்றுள்ளது. ஒரு மிகச் சிறிய அளவு நகர்ப்புற தொழிலாளர்கள் மட்டுமே வெளியிலிருந்து வந்து உள்ளனர்.

இத்தயை சூழலில் பிராந்திய தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்படும் சட்டங்கள் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை ஆனாலும் இதுபோன்ற சட்டங்கள் தேவையா என்ற வினாவே முதலில் எழுகிறது.  ஆந்திர மாநிலம் ஒரு அபாயகரமான் முன்னுதாரணம் ஏற்படுத்திய நிலையில் மற்ற மாநிலங்களும் இதை பின்பற்ற ஆரம்பித்தால் அனைத்து மாநிலங்களும் ஒன்றாக அழிவை நோக்கியே பயணிக்க வேண்டியிருக்கும்.

இந்தியாவில் பொருளாதார சுணக்கம் ஏற்படும் காலங்களில் இது போன்ற பிராந்திய பாதுகாப்பு கூக்குரல்கள் எழுவது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது.  

ளாதார மந்த நிலைக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் பார்க்கப்பட வேண்டும்.  இது போன்ற பிராந்திய பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமானால் இந்திய பொருளாதரம் வெகுவிரைவில் பழைய வளர்ச்சி நிலையை அடைதல் வேண்டும்.

2017-ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான தொழிலாளர் இடப்பெயர்ச்சி மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது.  ஆனாலும் ஒருங்கிணைந்த தொழிலாளர் சந்தையை உருவாக்குவதில் இந்தியா பின்தங்கியே உள்ளது. ஓட்டு வங்கி அரசியல் செய்யும் மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநில முதல்வர்களும் மகாராஷ்ராவின் சிவசேனா தலைவர்களும் பிராந்திய மக்களின் வேலை வாய்ப்பை இடம் பெயர்ந்தோர் அபகரிக்கின்றனர் என்ற வாதத்தை மிகைப்படுத்துகின்றனர்.  உண்மை என்னவெனில் இத்தகைய உளநாட்டு தொழிலாளர் இடப்பெயர்ச்சியால் இந்தியா பெருமளவில் நன்மை பெறும்.  

தேசிய தலைநகரத்தில் நடைபெறும் கட்டுமானங்கள் மத்தியபிரதேசம் போன்ற பிற மாநிலங்களில் இருந்து இடம் பெயரும் தொழிலாளர்களை ஈர்க்கின்றன ஏனெனில் பிராந்திய மக்கள் இத்தகைய வேலைகளை செய்ய முன்வருவதில்லை.  விவசாயத் தொழிலாளர்களையும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள் ஈர்க்கின்றன. வீட்டு வேலைகளுக்கான இடம் பெயர் தொழிலாளர்கள் இல்லாவிட்டால் பெருநகரங்களில் இவ்வேலைகள் பெரிதும் பாத்க்கப்படும் என்பது தெளிவு.

எந்த ஒரு பெரிய நாட்டிலும் நடைபெறும் முன்னேற்றமும் வளர்ச்சியும் அந்த நாட்டில் நடைபெறும் தொழிலாளர் இடப்பெயர்ச்சியின் மூலமே நடைபெற்று நிச்சயமான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.  இதற்கான காரணங்கள் எளிமையானவை எங்கே தொழிலாளர் இடப்பெயா்ச்சி அதிகமாக உள்ளதோ அங்கே தொழிலாளர் சந்தையும் – வேலைக்கான தேவையும் சமமாக இருப்பதன் மூலம் வேலையின்மை நிலவரம் சீராக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி ஏற்படுகின்றது.

-------------

Do The Job Quotas for Locals Solve The Unemployment Problem?

The best way to grow out of nativism is to ensure economic recovery

Paritala Purushotham

Nativism, the cry for job protection of locals, is rearing its head again in India. The new government in Maharashtra has announced its resolve to reserve 80% of jobs for local workers. The present Andhra Pradesh government has passed a few months ago “The Andhra Pradesh Employment of Local Candidates in the Industries/Factories Bill, 2019”. As per this law, 75% of jobs in industries are to be reserved for locals. Industry has three years to comply and, if adequately skilled people are not available, firms will have to train local people with the required skills.

The move could hamper fresh investments in the state and deter industries in the region leading to loss of jobs and reduced economic growth. Similar to what one sees in UK due to Brexit. However, it could work initially in a developed state but in the long run, may lead to a disparity of income and opportunities amongst the poorer states, specially BIMARU states. Considering nearly 20% India’s or 100 million workforce in the country is migrant; lack of skills among the locals will further affect profitability.

In fact, the Maharashtra government came up with 80% local jobs quota for state subsidies in 2008 but due to skill set unavailability with locals the proposal could not be successfully implemented. Similarly, Karnataka came up with the proposal for 100% local quota in 2016 but the legal department vetoed it as unconstitutional.

Madhya Pradesh is mulling over a similar law. Goa and Odisha may be next in line. Maharashtra and Assam have seen similar nativist agitations for decades in varying intensities. And as more people from North India move to the south, as a result of a major directional shift in India’s economic migrant trail, voices of anti-north Indian migrant sentiments are also beginning to surface, albeit softly.

The latest to join this line of thinking is Karnataka government. The state is trying to scale up talent of local people to exploit jobs in IT sector. The Karnataka CM has announced this in his Independence Day address.

Political jingoism rarely rests on data, but in this case, even those who chose to look at the evidence to make claims about the changing nature of India’s migration had nothing to rely on—until late-last month. Much delayed data from the 2011 census shows that most work-related migration remained within state borders even as India’s economic growth quickened considerably in the 2000s, that interstate migration did not dramatically rise between 2001 and 2011, and that the case against nativism, adequately enshrined in India’s Constitution, is firmly backed by data.

The new insight the census offers is a decisive directional shift in India’s migration story—with the Hindi heartland exodus no longer directed at just the economic hubs along the western coast, but also along a newly emerging north-to-south corridor. More Indians are also moving across state lines in search of better educational opportunities. But despite these newly emerging trails, in a majority of India’s districts, less than one in 10 (or less than 10%) of the urban workforce is an interstate migrant. In Madhya Pradesh, where there are calls for a quota for locals, that share is 5%.

Interstate migration

The Constitution of India guarantees freedom of movement and consequently employment within India through several provisions. Article 19 ensures that citizens can “move freely throughout the territory of India". Article 16 guarantees no birthplace-based discrimination in public employment. Article 15 guards against discrimination based on place of birth and Article 14 provides for equality before law irrespective of place of birth. Some of these Articles were invoked in a landmark 2014 case—Charu Khurana vs. Union of India—when a trade union had declined membership to a make-up artist because she had not lived in Maharashtra for at least five years, as per the union’s rules. The trade union lost the case. The recent job protection law passed by the Andhra Pradesh government can and should therefore be challenged primarily on constitutional grounds.

But constitutional provisions aside, the numbers on interstate migration should also influence the debate on job protection for locals. Census figures on absolute magnitudes of interstate migration are usually underestimates since they do not capture short-term and circular migration very well, but inferences can still be gleaned from growth rates and comparative percentages.

North-South corridor

There is also a distinct north-to-south corridor observed in the data. If Uttar Pradesh, Bihar, and West Bengal are considered as one bloc and Karnataka, Kerala, Tamil Nadu, Andhra Pradesh and Telangana are taken as another bloc, 85% of the bilateral flows between the two blocs are directed towards the south. Since 2011, field reports suggest that this corridor has grown substantially and it should be confirmed by the next census in 2021.

Between 2001 and 2011, the total number of interstate migrants who moved for economic reasons, in particular, rose marginally from 11.6 million to 13 million. Their share in the urban workforce hovered at only 8%, with substantial regional variation. 

Draft National Sample Survey Office’s (NSSO) job survey for 2017-18 pegged the unemployment rate in India in 2017-18 at 6.1%, a 45-year high. The yet to be released report stated that nearly one-third of the Indian states (11) had unemployment higher than the national average in 2017-18.

The Economic Survey 2017 revealed that the annual average labour migration was close to 9 million between states during 2011-16. States like Delhi, Maharashtra, Tamil Nadu, and Gujarat attracted large numbers of migrants from the Hindi-speaking states of Uttar Pradesh, Bihar, and Madhya Pradesh. Census 2011 also reported an increase in inter-district migration (within the same state) from 30% between the 1991 and 2001 census to 58% between 2001 and 2011.

Ironically, the state of Kerala with the highest literacy rate of 93.91% as per Census 2011 recorded the maximum number of jobless people at 11.4% along with an increase in internal migration rate as per Economic Survey 2017. Possibly a reflection of an under-skilled industry-ready workforce is pushing locals to migrate to other regions within the country.

Real jobs are not created by law but by industries coming in the region. In the long run subsidies and reservations may not be the solution for sustainable growth. What is required is an enabling environment that has simple investor-friendly policies, skill development and ease of doing business in the state.

One has to recognize that there is difference in passing a law and its implementation. Even in the case of Andhra Pradesh, there is a gap where the new law exempts industries like fertilisers, coal, pharmaceuticals, petroleum and cement for now; and it is likely that the stipulation does not extend to IT industry.

In city-like states and Union territories such as Delhi, Chandigarh or Daman, the figure of migrant workers to total workers was over 40% (of active workforce). In Mumbai, the figure stood at 24%, while for Bengaluru, Chennai, and Hyderabad, the figure was below 15%.

In over 410 out of 640 districts, especially districts in South India, the figure was well below 5%. In Tamil Nadu, the migrant workforce drawn to its manufacturing hubs such as Tiruppur mostly came from other districts within Tamil Nadu. As per the census, work related interstate migration to urban areas comprises, on average, less than 10% of the urban workforce. Even if these figures are doubled to account for underestimation, they would form only about 20% of the urban workforce, a far cry from concerns on interstate migrants swamping the labour market.

Instead of nativism, states need to create a framework where safe interstate migration for work is facilitated and fiscal coordination is pursued to enable the portability of social security benefits. If this is done, interstate migration would rise and provide more opportunities to remedy regional disparities. Matching skills seamlessly across geographies within India would also facilitate the ease of doing business, a much valued goal continually emphasized by the current central government.

Curious case of AP

While interstate migration for work has constitutional safeguards and is not a large phenomenon, it is puzzling that states such as Andhra Pradesh of net out-migration, should consider legislating job protection for locals.

If Telangana were to reciprocate with a similar legislation, it would be Andhra Pradesh that would suffer more (because of reduced access to the economic boomtown of Hyderabad). Census figures clearly show that economic migrants in the urban areas of districts that comprise the newly carved Andhra Pradesh mostly came from within those same districts (originating from a nearby town or village) and a miniscule proportion of the urban workforce came from outside.

In such a scenario, nativist legislation is unlikely to be a binding constraint but it begs the question of its necessity in the first place. Andhra Pradesh has set a dangerous precedent, which, if pursued by other states, will lead to a collective race to the bottom. 

Thus, calls for nativism and their critiques are not new in India and they tend to occur during periods of economic sluggishness. The calls for nativism should also be seen against the backdrop of the economic slowdown. The best way to grow out of nativism is to ensure that the economy is back on track at the earliest

The Economic Survey of 2017 had sought to enthusiastically argue that inter-state migration rates in India are fast increasing. Even so, (ayinappatiki,) India is far from being an integrated labour market, and politicians like the CMs of MP, Gujarat, and the Shiva Sena leaders exaggerate the migrants-taking-locals’-jobs issue to serve populist electoral aims. But the fact is that India will benefit immensely from more, not less, internal migration. 

Construction in the National Capital Region attracts migrant labour, including from MP, because locals don’t want these jobs. Farm labour in Punjab and Haryana attract migrant labour. Domestic services in all major urban centres will get terribly affected without migrant labour. 

Even a quick study of any successful development and growth episode in any major country will show high internal migration accompanied these positive economic experiences. The reasons are simple. High migration rates mean the labour market can efficiently match workers to jobs. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.