ETV Bharat / bharat

கரோனா பாதித்தவர்களை ஒதுக்காமல் இயல்பாக நடத்துங்கள்!

தூத்துக்குடி: கரோனாவிலிருந்து மீண்டவரின் அனுபவ பூர்வமான சிறப்புத் தொகுப்பு.

கரோனாவில் இருந்து குணமடைந்தவர்
கரோனாவில் இருந்து குணமடைந்தவர்
author img

By

Published : Apr 26, 2020, 9:11 AM IST

உலக நாடுகளை கரோனா பெருந்தொற்றானது அச்சுறுத்தி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் ஆதிக்கத்தால் வல்லரசு நாடுகள்கூட செய்வதறியாது திணறிவரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.

இந்நிலையில் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர். இதில் 5 பேர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 22 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.

தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் ஆட்சியர்
தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் ஆட்சியர்

சமீபத்தில், தூத்துக்குடி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த 7 பேரும், திருநெல்வேலியில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் என மொத்தம் 10 பேர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினர். இதையடுத்து தூத்துக்குடியில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவர் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் மொத்தம் 14 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். இவர்களில் ஆத்தூர், பேட்மாநகரம், போல்டன்புரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 5 பெண்கள், 2 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 9 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினர்.

அவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்தபோது அவர்கள் முழுமையாக குணமடைந்துவிட்டதாகத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, அவர்களுக்குப் பழம் வழங்கி, கைத்தட்டி, வாழ்த்தி வழியனுப்பிவைத்தனர்.

கரோனாவிலிருந்து மீண்டவரின் அனுபவ பூர்வமான சிறப்புத் தொகுப்பு

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளார்கள். மருத்துவமனை நாள்கள் எப்படி இருந்தது, போன்றவற்றை அந்த நோயிலிருந்து மீண்ட ஒருவர் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

“கரோனா நோய் என்பது பெரிய விஷயம் அல்ல. கரோனா பாதித்தவர்களை மற்ற மனிதர்கள் இயல்பாக நடத்துங்கள். அவர்களிடம் பாரபட்சம் காட்ட வேண்டாம். மன தைரியத்துடன் எதிர்கொண்டால் கரோனா நோயிலிருந்து எளிதில் மீளலாம்.

மருத்துவமனையில் கரோனா பாதித்தவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வீட்டில் இருப்பதைப் போல உணர்ந்தோம். மருத்துவர்களின் கனிவான உபசரிப்பு மூலமாக விரைவில் நாங்கள் நலம்பெற முடிந்தது" என்றார்.

கரோனா பாதித்தாலும் அவர்களும் மனிதர்கள்தான். தற்போது குணமடைந்து இருப்பவர்கள் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறார்கள். எனவே நாம் அவர்களை சமூகத்திலிருந்து விலக்கிவைக்காமல் இருப்போம்.

இதையும் படிங்க: நெசவாளர்களின் நெருக்கடியை புரிந்து கொண்டு உதவுமா தமிழ்நாடு அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.