நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் 8ஆவது நாளாக இன்று நடந்தது. இதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் பேசுகையில், '' நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே யுபிஎஸ்சி, தேசிய பணியாளர்கள் ஆணையம் மற்றும் பல்வேறு துறைகளிலும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் போட்டித் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தத் தேர்வுகள் ஐ.சி.எம்.ஆர் விதிமுறைகளை மீறுவதாக உள்ளது. தேர்வு எழுத பெரிய அளவிலான கூட்டம் கூடும் என்பதால் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
அதேபோன்று நாடு முழுவதும் ரயில்கள், பொது போக்குவரத்து சேவைகள் இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை. இதனால் தேர்வுகள் நடந்தால் தேர்வு எழுத வருவோருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாவதற்கு அதீத வாய்ப்பு உள்ளது. அதனால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ள போட்டித் தேர்வுகள் அனைத்தையும் ஒத்திவைக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? - மக்களவையில் சு.வெங்கடேசன் கேள்வி!