ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ரத்து செய்தது. பாஜகவின் இந்த செயலுக்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
அப்போது, ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்டு வீட்டு சிறைகளில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் 22.8.19 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் டெல்லியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற போராட்டம் இதில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,
- ஜம்மு-காஷ்மீர் மக்களையோ, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையோ கலந்து ஆலோசிக்காமல் அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப் பிரிவு 370ஐ நீக்கியிருப்பதன் விளைவாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்களாகிய நாங்கள் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு துணை நிற்கிறோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
- தகவல் தொடர்புகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், சிவில் சொசைட்டியின் உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை கைது செய்து தொடர்ந்து வீட்டுச் சிறையில் மத்திய அரசு வைத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
- ஆகவே, வீட்டுச் சிறையில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், அப்பாவி மக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். மக்களின் பேச்சுரிமையை பறித்தும், அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பித்தும் மத்திய அரசு எடுத்துள்ள கடும் நடவடிக்கைகள் அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதால், அந்த நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சகஜ நிலைமை திரும்புவதற்கும், அம்மாநில மக்கள் தங்களின் உறவினர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்புகள் மீண்டும் அளிக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களாகிய நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.
Intro:Body:
ஜனநாயகத்தைக் காப்பாற்றிட - மனித உரிமைகளைப் பாதுகாத்திட
காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி,
புதுடெல்லி, ஜந்தர் மந்தரில்
அனைத்துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம்!
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கைக்கிணங்க, ஜனநாயகத்தை - மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும், காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை உடனேவிடுவிக்க வலியுறுத்தி, தி.மு.க. ஏற்பாட்டில், அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற ‘‘மாபெரும் ஆர்ப்பாட்டம்!" இன்று (22.8.2019) காலை 11.00 மணியளவில், புதுடெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரியஜனதாதள், தேசிய மாநாட்டு கட்சி, சரத் யாதவ் உள்ளிட்ட 15 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் கண்டனஆர்ப்பாட்டத்தை நடத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் கைது செய்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள், முன்னாள்அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் மற்றும் அப்பாவி மக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூட்டாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி, வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-
We the leaders of various political parties gathered here resolve as follows:
As a consequence of abrogation of Article 370 of the Constitution of India in respect of Jammu and Kashmir, without following due process of consultations with the people of the State or their elected representatives, an undeclared state of Emergency has come into force in the Valley. We stand by the people of Jammu & Kashmir in their difficult hour.
The decisions taken by the Union Government to impose a complete communication black-out and the continued detention of former Chief Ministers and political leaders including Former Ministers, Ex-MLAs, academics, members of civil society and even innocent citizens running into thousands are matter of serious concern.
We demand immediate release of all public representatives of mainstream political parties and innocent citizenS. There has been a chilling crackdown on free speech and right of assembly. Such actions go against the fundamental rights guaranteed by the Constitution of India and need to be immediately reversed.
We also demand immediate restoration of normalcy, and communications so that people can reach out to their loved ones and their family members.
தீர்மானம் - தமிழாக்கம்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களாகிய
நாங்கள் கீழ்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.
ஜம்மு காஷ்மீர் மக்களையோ, அங்குள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையோ கலந்து ஆலோசிக்காமல் அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப் பிரிவு 370-ஐநீக்கியிருப்பதன் விளைவாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை மத்திய அரசு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்களாகியநாங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு துணை நிற்கிறோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல் தொடர்புகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிதலைவர்கள், கல்வியாளர்கள், சிவில் சொசைட்டியின் உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கைது செய்து தொடர்ந்து வீட்டுச் சிறையில் மத்திய அரசு வைத்திருப்பது மிகுந்த கவலைஅளிக்கிறது.
ஆகவே, வீட்டு சிறையில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், அப்பாவி மக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.மக்களின் பேச்சுரிமையை பறித்தும், அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பித்தும் மத்திய அரசு எடுத்துள்ள கடும் நடவடிக்கைகள் அரசியல் சட்டம் அளித்துள்ளஅடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதால்- அந்த நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சகஜ நிலைமை திரும்புவதற்கும், அம்மாநில மக்கள் தங்களின் உற்றார் உறவினர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்புகள் மீண்டும் அளிக்கப்படவும்உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களாகிய நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
***
Conclusion: