முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரப்பட்டுள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு முடிவுகளுக்கு எதிராகவும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.