தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் தீபாவளி பண்டிகைக்கு மறு நாளான அக்டோபர் 28ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இங்கு வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவிட்டு வருவதற்காக தீபாவளி பண்டிகைக்கு மறு நாளான அக்டோபர் 28ஆம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை என்றும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தீபாவளி 2019 - பட்டாசு உற்பத்தி குறைவால் எகிறிய விலை!