ETV Bharat / bharat

நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து: காணாமல் போன திவ்யா அக்கவுண்ட்!

author img

By

Published : Jun 2, 2019, 1:32 PM IST

பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து சொன்ன காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனாவின் ட்விட்டர் கணக்கு டெலிட் செய்யப்பட்டுள்ளது.

divya

மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. கடந்தமுறை பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

divya
நிர்மலா சீதாராமனுக்கு திவ்யா வாழ்த்து

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திவ்யா, இந்திரா காந்திக்குப் பிறகு இந்த பொறுப்பு வகிக்கும் பெண் நீங்கள்தான். ஜிடிபி சரியாக இல்லை, பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்க உங்களால் இயன்றதை செய்வீர்கள் என நம்புகிறேன். உங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு - வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார்.

divya
திவ்யா ட்விட்டர் பக்கம்

இந்த வாழ்த்து பதிவுக்கு பின் திவ்யாவின் ட்விட்டர் பக்கம் டெலிட் செய்யப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து சொன்னதால் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து திவ்யா நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. திவ்யா தரப்பில் இருந்து இதுதொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.