ETV Bharat / bharat

சீனாவில் விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு!

ஹைதராபாத்: கரோனா வைரஸ் பரவல் தனிமைப்படுத்துதல் காரணமாக சீனாவில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளது.

COVID-19  Coronavirus  Divorce cases in China  Divorce cases soars in China  COVID-19 outbreak  சீனாவில் விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு!  விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு  சீனாவில் கரோனா பாதிப்பு

author img

By

Published : Mar 21, 2020, 5:03 PM IST

சீனாவின் தென்மேற்கு பகுதியில் சிச்சுவான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து தற்போது வரை 300 விவாகரத்து விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று திருமண பதிவாளர் லூ சிசூன் கூறினார்.

இதேபோல் சீனாவின் வடமேற்கு மாகாணமான சான்ஷியிலும் மார்ச் 1ஆம் தேதிக்கு பின்னர் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளது. இந்த தகவல்கள் சீன ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் முதலில் அறியப்பட்ட கரோனா என்னும் கோவிட்-19 வைரஸ் தொற்று, தற்போது உலகெங்கிலும் 150 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை உலகில் எட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று அதிகம் பாதித்த நாடுகளில் சீனா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

கரோனா வைரஸூக்கு சீனாவில் மூவாயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.