திருவனந்தபுரம் (கேரளா): கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த பழங்குடியின நபர் கோபாலன் தேனி கொட்டியதால் நேற்று முன்தினம் (நவம்பர் 29) உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக, சுல்தான் பாத்ரே தாலுக்கா மருத்துவமனைக்கு உறவினர்கள் எடுத்துச்சென்றனர். அங்கு உடற்கூறாய்வு செய்பவர் இல்லாத காரணத்தால், அவரது உடல் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
அங்கும் உடற்கூறாய்வு செய்பவர் இல்லை எனத் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், அலட்சியம் காட்டி கோபாலனின் உடலை அவமதித்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இரண்டு நாட்களாக உடற்கூறாய்வு செய்யாததால் உடல் அழுகத் தொடங்கிவிட்டதால், அதனை பெறமுடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருப்பது அவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சந்தா கோச்சரின் மனு தள்ளுபடி