ETV Bharat / bharat

நெருக்கடி நேரத்தில் தொழிலாளர்கள் உரிமை பறிப்பு: சிறப்புக் கட்டுரை!

பெங்களூரு: இந்தக் கட்டுரையில் பெங்களூருவில் உள்ள வழக்குரைஞரும், சட்டம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகருமான மேத்யூ இடிகுல்லா, கரோனா பெருந்தொற்றின்போது பாஜக ஆட்சிசெய்யும் சில மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

Labour laws  Economic crisis  Changes in labour laws  Labour rights during crisis  Indian Trade Unions  Labour Laws Ordinance  International Labour Organisation  Article on labour laws  Mathew Idiculla  தொழிலாளர் உரிமை பறிப்பு  crisis  வழக்குரைஞர் மேத்யூ இடிகுல்லா  தொழிலாளர் சட்டத் திருத்தம்
Labour laws Economic crisis Changes in labour laws Labour rights during crisis Indian Trade Unions Labour Laws Ordinance International Labour Organisation Article on labour laws Mathew Idiculla தொழிலாளர் உரிமை பறிப்பு crisis வழக்குரைஞர் மேத்யூ இடிகுல்லா தொழிலாளர் சட்டத் திருத்தம்Labour laws Economic crisis Changes in labour laws Labour rights during crisis Indian Trade Unions Labour Laws Ordinance International Labour Organisation Article on labour laws Mathew Idiculla தொழிலாளர் உரிமை பறிப்பு crisis வழக்குரைஞர் மேத்யூ இடிகுல்லா தொழிலாளர் சட்டத் திருத்தம்
author img

By

Published : May 15, 2020, 1:29 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடு பொது சுகாதாரம், பொருளாதார நெருக்கடிக்கு ஆழ்ந்து செல்லும்போது, ​​மாநில அரசுகள் தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகின்றன. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களின் வரம்பை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளன.

இந்தச் 'சீர்த்திருத்தங்கள்' தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வணிகங்களை குறைந்தபட்ச விதிமுறைகள், பணிநீக்கங்கள், தொழில் பாதுகாப்பு, பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பல பாதுகாப்பு விதிமுறைகளிலிருந்து விலக்கு அளித்துவிட்டு, அதன்மூலம் முதலீட்டை ஈர்க்கப் பார்க்கின்றன.

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களும் தொழிலாளர் ஒழுங்குமுறைகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் நீட்டிக்கப்பட்ட வேலை நேரத்தின் வடிவில் விரிவான திட்டத்தை அறிவித்துள்ளன. மேலும் சில மாநிலங்களும் இதைப் பின்பற்றக்கூடும்.

தொழிலாளர் சட்டங்களில் மிகவும் தீவிரமான மாற்றங்கள் உத்தரப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, பல தொழிலாளர் சட்டங்களுக்கு தற்காலிக விலக்கு அளித்துள்ளது. இந்தத் தற்காலிக விலக்கு, மூன்று ஆண்டுகள் தொடரும், இதுமட்டுமின்றி அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் முற்றிலும் நிறுத்திவைக்கிறது.

அதன்படி, “கட்டட, பிற கட்டுமான தொழிலாளர்கள் சட்டம் 1996, தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம் 1923, முறைசாரா தொழிலாளர் அமைப்புச் (ஒழிப்பு) சட்டம் 1976, ஊதிய கொடுப்பனவுச் சட்டம் 1936இன் பிரிவு ஐந்து ஆகியவை தக்கவைக்கப்பட்டுள்ள ஒரே தொழிலாளர் சட்டங்கள் ஆகும்.

எவ்வாறாயினும், குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948, தொழில்துறை சச்சரவு (தகராறு) சட்டம் 1947, தொழிற்சாலைகள் சட்டம் 1948, பணி நிலைமைகளை ஒழுங்குப்படுத்தும் சுமார் 30 தொழிலாளர் சட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

உத்தரப் பிரதேசத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களும் தொழிலாளர் சட்டங்களின் முக்கிய விதிகளை மீறுகின்றன. இந்த நடவடிக்கைகள் வணிகங்கள் விருப்பப்படி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும், பணிநீக்கம் செய்யவும் அனுமதிக்கின்றன.

தற்போதுள்ள பாதுகாப்பு, சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதிலிருந்து புதிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கின்றன. மேலும், நிறுவனங்கள் அதிக வேலை நேரத்தை விதிக்கவும் அனுமதிக்கின்றன.

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களும் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 8 முதல் 12 மணி நேரம் வரை நீட்டித்துள்ளன.

இந்த மாநிலங்களில் உள்ள முதலாளிகள் தொழிலாளர்களுக்கு கூடுதல் நேர ஊதியத்தை வழங்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வது, குறிப்பாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அவை மொத்தமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பது தொழிற்சங்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சி.ஐ.டி.யு.) இதனை, "உண்மையில் நாட்டிற்கு செல்வத்தை உருவாக்கும் வகையில், உழைக்கும் மக்கள் மீது அடிமைத்தனத்தின் நிபந்தனைகளை சுமத்துவதற்கான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை" என்று கூறியுள்ளது.

கரோனா வைரஸ் நெருக்கடியை "மனித உரிமைகளை நசுக்குவதற்கும், பாதுகாப்பற்ற பணியிடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கும், தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கும், அவர்களின் குரலை அடக்குவதற்கும் பயன்படுத்தக் கூடாது” என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்), பாஜகவுடன் இணைந்த பாரதிய மஜ்தூர் சங்கம்கூட இந்த முடிவுகளை விமர்சித்துள்ளன. இந்த மாநிலங்களால், தொழிலாளர் சட்டங்களை இடைநிறுத்துவது கடுமையான அரசியலமைப்பு, சட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் 3(III)ஆவது பிரிவில் வருகிறது.

ஆக, தொழிற்சங்கம், மாநிலங்கள் இரண்டுமே இந்த விஷயத்தில் சட்டங்களை உருவாக்க முடியும். தற்போது மத்தியில் 44 சட்டங்களும், மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட சட்டங்களும் தொழிலாளர்களுக்கு உள்ளன.

இந்தச் சட்டங்களில் சட்டப்பேரவைகளில் திருத்தங்களை நிறைவேற்றலாம். இருப்பினும், இந்திய அரசியலமைப்பின் 254 (2)ஆவது பிரிவின்கீழ், அரசு அறிமுகப்படுத்திய சட்டவிதிகள் மத்திய அரசுடன் மாறுபட்டால், அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவைப்படும்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் 213ஆவது பிரிவின்கீழ் கட்டளைகளை பிறப்பிப்பதன் மூலம் மத்திய சட்டங்களை இடைநிறுத்தியுள்ளன. இது மாநில சட்டப்பேரவை அமர்வில் இல்லாதபோது அவசர தேவைப்படும் விஷயங்களில் ஒரே சட்ட சக்தியைக் கொண்ட கட்டளைகளை ஆளுநருக்கு அறிவிக்க அனுமதிக்கிறது.

தொழிலாளர் சட்ட விதிகளில் சிலவற்றை இடைநிறுத்துவது மத்திய சட்டங்களின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மத்திய அரசின் ஆலோசனையின்படி செயல்படும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவைப்படும். இருப்பினும், இந்தச் சட்டங்களை அனுமதிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா? என்ற அதிகாரம் நரேந்திர மோடியின் கைகளில் உள்ளன.

இந்த உத்தரவுகள் நாட்டில் தொழிலாளர் சட்ட ஆட்சியை முற்றிலுமாகக் குறைக்கும். இதனால் மத்திய அரசுக்கு ஒப்புதல் அளிப்பதில் அச்சம் இருக்கும். இருப்பினும், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறதா? என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

மேலும், குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலைக் கொடுத்தாலும், இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம். ஏனெனில் தொழிலாளர் சட்டங்களை இவ்வாறு நீர்த்துப்போகச் செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது. ஏனெனில் இது அரசியலமைப்பின்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது.

இந்திய அரசியலமைப்பின் 23ஆவது பிரிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் 'கட்டாய அதீத உழைப்பு' போன்ற நடைமுறைகளிலிருந்து சுரண்டப்படுவதற்கு எதிரான அடிப்படை உரிமையை வழங்குகிறது. 'கட்டாய உழைப்பு' என்பதன் பொருள், தொடர்ச்சியான உழைப்புக்கு மட்டுமல்ல; இந்திய உச்ச நீதிமன்றத்தால் இன்னும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

1982ஆம் ஆண்டில் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம், இந்திய ஒன்றியக் கழகம் தொடுத்த வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. குறைந்தபட்ச தொழிலாளர் சட்டம் 1948 உள்ளிட்ட தொழிலாளர் சட்டத்திருத்தங்களை நிறுத்திவைப்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

மேலும், இது இந்திய அரசு கையெழுத்திட்டுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation -ILO) மாநாடு (அவை கூட்டுகை) 144ஐ மீறும் செயலாகும்.

கரோனா தீநுண்மி பொதுஅடைப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நேரத்தில், இத்தகைய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது சட்டரீதியாக சந்தேகத்திற்குரியது மட்டுமல்ல, தார்மீக ரீதியாகவும் வெறுக்கத்தக்கது.

மேலும், தீ பாதுகாப்பு விதிகள், கழிப்பறைகள், பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற சுகாதார, பாதுகாப்பு தர சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வது பொது சுகாதார நெருக்கடியின்போது தொழிலாளர்களின் வாழ்க்கையை மேலும் ஆபத்தில் ஆழ்த்தும்.

இந்தியாவின் தொழிலாளர் சட்ட ஆட்சி சில அடிப்படை குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக முறைசாரா துறையில் அதன் பணியாளர்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் உள்ளனர்.

ஆகவே, தொழிலாளர் சட்டங்களை மாநிலங்கள் இடைநிறுத்துவது, இந்தச் சவாலை எதிர்கொள்ளும் சீர்த்திருத்தங்கள் அல்ல; மாறாக, அவர்களைத் துல்லியமாக மேலும் அழுத்தத்துக்குத் தள்ளும்.

இதையும் படிங்க: ஒருபோதும் தொழிலாளர் நல சட்டங்களைத் திருத்த மாட்டோம் - மம்தா திட்டவட்டம்

'தொழிலாளர் சட்டங்களில் சமரசம்' - ஆபத்தா, வளர்ச்சியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.