பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் புதுச்சேரி மற்றும் புதுச்சேரி வேளாண்மைத் துறை சார்பில் மாநில 'உணவு பழக்கவழக்கம் 2020' என்னும் தலைப்பின்கீழ் இயற்கை முறை விவசாயிகள், உணவு தயாரிப்பு, வியாபாரம் செய்பவர், பொதுமக்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலை புதுச்சேரி வேளாண்மைத் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கிவைத்தார். அதில் இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் புதுச்சேரியின் உணவுப்பழக்கத்தைப் பற்றி விவாதிப்பது, அப்பழக்கம் எவ்வாறு புதுச்சேரியின் பலதரப்பட்ட மக்களிடம் பரவியுள்ளது என்பது குறித்தது என்றார்.
மேலும் விழாவில் விவசாயம் செய்பவர்கள், உணவு தயாரிப்பவர்கள், விற்பவர்கள் ஆகியோர்களுடன் இணைந்து புதுச்சேரி மக்களின் உடல் நலம், சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வரும் 25ஆம் தேதிவரை நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள், அதன்மூலம் செய்யப்பட்ட உணவுப்பொருள்கள் உள்ளிட்டவை பொதுமக்களிந் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: துணை நிலை ஆளுநருக்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!