கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பெற்ற பின்னரும்கூட பல நாட்களாக அவரின் அமைச்சரவை சகாக்கள் பதவி ஏற்காமல் இருந்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவு இதற்கு காரணமாக கூறப்பட்டபோதிலும், அமைச்சரவைத் தேர்வில் மாநில தலைமைக்கும் ,மத்திய தலைமைக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இறுதியாக, 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மூன்று பேருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அமைச்சரவையில் மூத்தத் தலைவர்களுக்கு இடம் அளிக்காதது கட்சியில் பெரிய சரச்சையாக வெடித்தது. முக்கியமாக தனக்கு போக்குவரத்துத் துறை வழங்கப்பட்டதில் சி.டி.ரவிக்கு வருத்தமிருப்பதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் கட்சியைத் தாண்டி எதனையும் யோசிக்கமாட்டேன். என்னுடைய பலம், பலவீனம் இரண்டும் அதில்தான் அடங்கியிருக்கிறது. எனக்கு முக்கியமான அமைச்சரவை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதற்காக கடினமாக உழைப்பேன்" என்றார்.