எதிர்பாராத விதமாக அரங்கேரிய காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம், அங்குள்ள இயல்பு நிலையை முடக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றம் செய்ததையடுத்து அங்கு தொடர்ச்சியாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அப்பகுதியின் வளர்ச்சி பெரும் பாதிப்பிற்குள்ளானது.
சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு முன்னதாகவே, கல்வியறிவு, வறுமை, பொருளாதார குறியீடுகள், குழந்தை இறப்பு விகிதம் உள்ளிட்ட கூறுகளில் ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய நிலையிலேயே உள்ளது.
தனியார் முதலீடு என்ற ஒரே அளவுகோளில் மட்டுமே காஷ்மீர் பகுதி பின்தங்கி இருந்தது. அதற்கு சட்டப்பிரிவு 370 என்பது காரணம் அல்ல, மாறாக அங்கு நிலவும் அரசியல் ஸ்திரமற்ற சூழலே. சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பான பாஜக அரசின் முடிவை ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் ஒருசேர எதிர்த்துள்ளன. பாஜக கூறியபடி இந்த முடிவு வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக - ஆர்.எஸ்.எஸ். கொள்கை மட்டும் பூர்த்தி செய்த இந்த நடவடிக்கை காஷ்மீருக்கு எந்த வளர்ச்சியையும் கொண்டுவரவில்லை என மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ரோஃப் தார் குற்றஞ்சாட்டியுள்ளார். அகதிகளின் மறுவாழ்வு, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் காஷ்மீரின் நிலைமை மோசமாகவே உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி குறித்து துறைசார் நிபுணரான எஜேஸ் அயோப் ஈடிவி பாரத் குறித்து பேசுகையில், பொருளாதாரத்தில் பெரும் முடக்கத்தை ஏற்படுத்தியுள்ள சட்டப்பிரிவு 370 நீக்கம், அங்குள்ள 40-45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேலையின்மை 22 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது. முதலீடுகள் ஈர்க்கப்படுவதற்கான சூழல் இங்கு நிலவுகிறது. அமைதி திரும்பினால் மட்டுமே சர்வதேச நாடுகளின் முதலீடு என்பது கைகூடும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 5ஆம் தேதியும், பாஜக எடுத்த முக்கிய முடிவுகளும்!