புதுச்சேரி கோலாஸ்நகர் காந்தி வீதியில் வசித்துவருபவர் சுஜய்காந்த். இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் நடத்திவருகின்றார். இவரது வீட்டில் இரண்டு நாள்களுக்கு முன் அவரது மகனின் பிறந்தநாள் எளிய முறையில் நடைபெற்றது.
விழா முடிந்து அனைவரும் புறப்பட்ட பின்னர் அவரது மனைவி நகைகளைக் கழற்றி மேசையில் வைத்துள்ளார். அதன் பிறகு இன்று காலை பார்த்தபோது வைரக்கம்மல், வைரத்தோடு ஆகியவை மட்டும் காணவில்லை.
இது தொடர்பாக ஒதியன்சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் மாறன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதில் வீட்டுக்கதவு, பீரோ உடைக்கப்படவில்லை, பொருள்கள் எதுவும் களைக்கப்படவில்லை என்று கூறப்படுவதால் அவர்களுக்குத் தெரிந்தவர்கள்தான் எடுத்திருக்க வேண்டும் எனக் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதனால் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர். திருடுபோயுள்ள வைர மோதிரம், தோடு ஆகியவற்றின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகின்றது.
இந்தத் திருட்டு குறித்து ஓதியன்சாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.