இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது இயல்பு நிலை திரும்புமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
இதனிடையே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நாட்டின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. முக்கியமாக விமானப் போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், மே 4ஆம் தேதி விமான பயணச்சீட்டுக்கான முன்பதிவை சில தனியார் விமான நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
இதையடுத்து விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''மே 4ஆம் தேதி விமான போக்குவரத்து அனுமதிப்பது பற்றி அரசு முடிவெடுத்தப் பின் அறிவிக்கப்படும். அதுவரை பயணச்சீட்டுக்கான முன்பதிவை நிறுத்தி வையுங்கள்'' எனக் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19: தெலங்கானாவில் மே-7ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு