ETV Bharat / bharat

ஏழுமலையானுக்கு ஜாக்பாட்: உண்டியலில் 20 தங்கக் கட்டிகள்! - COVID-19

திருமலை திருப்பதியில் ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 10ஆம் தேதி வரை 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் 2 கிலோ இடையுள்ள 20 தங்கக்கட்டிகளைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி
author img

By

Published : Jul 13, 2020, 11:40 AM IST

திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்): அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் 2 கிலோ எடையுள்ள 20 தங்கக்கட்டிகளை காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.

திருமலை திருப்பதியில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், காவல் துறையினர், பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அனைவரும் தற்போது மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பக்தர்கள், ஊழியர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க ஏழுமலையானை தரிசிக்க கடைப்பிடிக்கப்படும் வரிசைகளில் கிருமிநாசினி தெளிக்கும் நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.

ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 10ஆம் தேதி வரை ஒரு மாதத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஒருமாத உண்டியல் வருமானமாக 15 கோடியே 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. லட்சம் பக்தர்களுக்கு மேல் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்தர்கள் யாரும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி தகுந்த இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், நெரிசல் இல்லாமல் நன்றாக சாமி தரிசனம் செய்ய முடிவதாக பக்தர்கள் கூறியுள்ளார். இச்சூழலில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் 2 கிலோ இடையுள்ள 20 தங்கக்கட்டிகளைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.