ETV Bharat / bharat

''மகாராஷ்டிரா முதலமைச்சரின் சொத்து மதிப்பு ரூ.3கோடி'' - maharstra assembly polls candidates affidavit

மும்பை: தன்னிடம் ரூ. 3கோடி சொத்து உள்ளதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவிந்தர பட்னாவிஸ் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ்
author img

By

Published : Oct 5, 2019, 8:26 AM IST

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அம்மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதில் முதல்கட்டமாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துவருகின்றனர்.

இதேபோல் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸூம் தனது வேட்புமனுவுடன் பிரமாண பத்திரத்தையும் நேற்று தாக்கல் செய்தார். அதில், மூன்று கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரொக்கத்தை பொறுத்தவரையில் கையில் பதினேழாயிரத்து ஐந்நூறு ரூபாயும், வங்கியில் எட்டு லட்சத்து 29 ஆயிரத்து 665 ரூபாயும், மனைவி அம்ருதா பெயரில் 99 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் நடந்த தேர்தலில் ஒரு கோடியே 81லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருந்ததாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: பாஜக-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு உறுதியானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.