ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்குமா பாஜக? - மகாராஷ்டிரா சட்டப்பேரவை குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேவேந்திர பட்னாவிஸை பாஜக எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

BJP
author img

By

Published : Oct 30, 2019, 5:16 PM IST

மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை.

இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிவசேனா, 56 இடங்களை வைத்துக்கொண்டு பாஜகவிடம் ஆட்சியில் சமபங்கு கோரிவருகிறது. ஆனால், முதலமைச்சர் பதவி குறித்து அமித் ஷாவிடம் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பேசவில்லை என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேவேந்திர பட்னாவிஸை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவிவரும் நிலையில், பாஜக ஆட்சியமைக்க சிவசேனா உதவுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: சைகோ போல நடந்து கொள்கிறார் ஜெகன் - சந்திரபாபு

Intro:Body:

Devendra Fadnavis elected as the leader of Maharashtra BJP legislative party

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.