மதச்சார்பற்ற ஜனதா தளம் (எஸ்) தலைவர் தேவ கவுடா இந்தியாவின் பிரதமராக 10 மாதம் ஆட்சி செய்தார்.
தேவகவுடாவின் மகனும் கர்நாடகாவின் முதலமைச்சருமான குமாரசாமி இது குறித்து கூறுகையில், தனது தந்தை பதவி வகித்தபோது பயங்கரவாத செயல்கள் ஏதும் நடைபெறவில்லை எனவும், நாடு முழுவதும் அமைதியாக இருந்ததாகவும் கூறினார்.
மோடி ஆட்சி குறித்து அவர் கூறுகையில், இன்று மோடி தனது தேர்தல் பரப்புரையின்போது பாலகோட் தாக்குதல் பற்றி கூறி வாக்கு சேகரிக்கிறார்.
இதுவரை எத்தனையோ முறை இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. ஆனால் யாரும் இவரைப்போல அதனை சுய லாபத்துக்காக பயன்படுத்தவில்லை. அதனால் மோடியை விட தேவகவுடாவே சிறந்த பிரதமர் என்று அவர் கூறினார்.