ETV Bharat / bharat

உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு கிருமிநாசினி விற்பனை! - உற்பத்தி விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு கிருமிநாசினி விற்பனை

ஹைதராபாத்: மருத்துத்துறை வணிகமயமாகி வரும் இக்காலக்கட்டத்தில், மருத்துவ நிறுவனம் ஒன்று உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு சானிடைசர் எனப்படும் கிருமிநாசினிகளை விற்பனை செய்துவருகிறது.

Eenadu Vasundhara  Vaishali Aggarwal  Scott Edil Pharmacia  Sanitisers  Manufacturing Cost  Baddi  Himachal Pradesh  COVID 19  Novel Coronavirus  உற்பத்தி விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு கிருமிநாசினி விற்பனை  கிருமிநாசினி விற்பனை, ஈநாடு, வசுந்தரா, வைஷாலி

author img

By

Published : May 5, 2020, 5:52 PM IST

பல வணிக நிறுவனங்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பரவும் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. ஆனால், ஒரு மருந்து நிறுவனமோ மனிதாபிமான அடிப்படையில் வழக்கமான விலையைவிட குறைத்து சானிடைசர் (கிருமிநாசினி) மருந்துகளை ஸ்காட் எடில் பார்மசியா விற்பனை செய்துவருகிறது.

இதுகுறித்து ஸ்காட் எடில் பார்மசியா தொழில்நுட்ப இயக்குனர் வைஷாலி அகர்வால், ஈநாடு நாளேட்டின் செய்தியாளர் வசுந்தரா உடனான உரையாடலின் போது கூறியதாவது, “தங்களது நிறுவனம் உற்பத்தி செலவைவிட குறைந்த விலையிலேயே கிருமிநாசினிகளை (சானிடைசர்) விற்பனை செய்து வருகின்றது.

ஹரியானா சண்டிகரைத் தலைமையிடமாகக்கொண்டு, இமாச்சலப் பிரதேசத்தின் பாடியில் ஐசோபிரைல் ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களைத் தயாரிக்கும் பிரிவைக்கொண்டுள்ள நிறுவனம் எங்களிடம் உள்ளது. இது 200 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இங்கிருந்து மாதந்தோறும் 10 ஆயிரம் யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதற்கிடையில் கரோனா நெருக்கடி காலத்தில் தேவை அதிகரித்தது. இதனால் பல மருந்துகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நிறுவனம் சானிடைசர் எனப்படும் கிருமிநாசினி தயாரிப்பில் மும்முரம் காட்டியது. துப்புரவுப் பணியாளர்களின் பற்றாக்குறையையும் நாங்கள் கவனத்தில் கொண்டோம்.

தற்போது ஊழியர்கள் நாளொன்று மூன்று முறை சுழற்சிப் பணியில் பணிபுரிகின்றனர். மார்ச் மாதத்தில் மட்டும் 15 லட்சம் சானிடைசர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்றார். வைஷாலியின் பணியைச் சிறப்பானதாக மாற்றுவது உற்பத்தி செலவைக் காட்டிலும் குறைந்த விலையில் சானிடைசர்கள் விற்பதுதான்.

இதுகுறித்து வைஷாலி கூறுகையில், “இழப்பு இருந்தபோதிலும், சமூகத்தின் நல்வாழ்வுக்காக தங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

கடந்த மாதம் (ஏப்ரல்) 12ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்தில் வைஷாலியின் உற்பத்தி அலகு ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது. இது வைஷாலியைத் தடுக்கவில்லை. சண்டிகரிலுள்ள மற்றொரு ஆலையில் உற்பத்தி தொடர்ந்தது. தொற்று நோய்களின் போது, அவர் செய்த சிறப்பான பணிக்காக, வைஷாலி எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றுவருகிறார்.

இதையும் படிங்க: சீனாவின் இழப்பு, இந்தியாவுக்கு ஆதாயமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.