கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், முகக்கவசங்களின் தேவையும் தற்போது அதிகரித்துவருகிறது. மருத்துவ முகக்கவசங்கள், என்-95 முகக்கவசங்கள், துணியிலான முகக்கவசங்கள் ஆகியவற்றைத் தாண்டி பல்வேறு வகையிலான, அலங்கரிக்கப்பட்ட முகக்கவசங்களுக்குச் சந்தையில் மதிப்பு கூடுகிறது.
மத்திய, மாநில அரசுகள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் நபர்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. ஆயினும், குழந்தைகள் சிலர் முகக்கவசங்கள் அணிவதை விரும்புவதில்லை. எனவே, இவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கார்ட்டூன் முகங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்களும், விலங்குகள், பொம்மைகள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்களும் தயாரிக்கப்படுகிறது என்கிறார் சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த வடிவமைப்பாளர் தளி பர்வாணி.
அதுமட்டுமின்றி, திருமண நிகழ்வுகளில் இருபது நபர்களுக்கு குறைவானவர்களே கலந்துகொள்ளவேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளதால், பல்வேறு தரப்பினரும் ஆடைகளுடன் சேர்ந்து, அதற்கு இணையான முகக் கவங்களையும் தயாரித்துத்தருமாறு கேட்பதாகவும் கூறுகிறார்.
மேலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிப்போன முகக் கவசங்களை அவர்களின் விருப்பத்திற்கேற்ப உருவாக்கித் தருகிறோம். இதனால், வாழ்வாதாரம் இழந்து அவதியற்ற பல்வேறு தையல் கலைஞர்களும் பலனடைகின்றனர் என்கிறார் அவர்.