ETV Bharat / bharat

ஆம்பன் மீட்புப் பணிகள்; மேற்கு வங்கத்திற்கு கூடுதலாக 10 தேசிய பேரிடர் மீட்புக் குழு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆம்பன் மீட்புப் பணிகளுக்காக ஏற்கனவே 26 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டுவரும் நிலையில் கூடுதலாக 10 குழுக்கள் மீட்புப் பணிகளுக்கு சேர்ந்துள்ளன.

deployment-of-10-additional-ndrf-teams
deployment-of-10-additional-ndrf-teams
author img

By

Published : May 23, 2020, 6:51 PM IST

மேற்கு வங்கத்தில் கடந்த புதன் கிழமை(மே 20) ஆம்பன் புயல் கரையை கடந்தது. அதனால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. சுமார் 1.5 கோடி மக்களின் இயல்பு வாழ்கை நேரடியாகப் பாதிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. இந்தப் புயலினால் மட்டும் மேற்கு வங்கத்தில் இதுவரை 85 பேர் உயிரிழந்தனர்.

புயலில் சாய்ந்த மரங்கள்
புயலில் சாய்ந்த மரங்கள்

அதுமட்டுமல்லாமல் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் 26 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (என்டிஆர்எஃப்) மேற்கு வங்கத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் கூடுலாக 10 தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்புப் பணிகளில் இணைந்துள்ளன. தற்போது மொத்தம் 36 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மேற்கு வங்கத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: 1.9 கோடி குழந்தைகள் ஆம்பன் புயலால் பாதிப்பு - யுனிசெப் கவலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.