புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொலியில், ”முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், முதலமைச்சர் அலுவலகம் இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள மருத்துவர்கள் மூன்று சுற்றாக வேலைசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவச் சேவை கிடைக்கப்பெறும். 40 மருத்துவர்கள், 60 செவிலியர் ஆகியோரைப் புதிதாக நியமிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் இறந்த வியாபாரிகளின் இறப்பிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவதால் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். விதிகளைப் பொதுமக்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
மாநிலத்தில் ஜூலை இரண்டாம் தேதிவரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். ஜூன் 30 ஆம் தேதி மத்திய அரசு விதிமுறைகளைத் தெரிவிக்கும். அதற்குப் பின்பு தமிழ்நாட்டைப் பின்பற்றி ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.