டெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.8ஆக பதிவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் அடர்ந்த பனிப்பொழிவு நிலவுவதால் சாலைகள் மூடிய நிலையில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டனர்.
நேற்று டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமானதாக இருந்தது. முக்கிய நகரங்களில் சுமார் 50 மீட்டருக்கும் மேலாக அடர்ந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.