தெலங்கானா மாநிலம் மன்சேரியல் மாவட்டத்தின் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்தவர் குடிமல்லா ராஜாகட்டு. சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த 16ஆம் தேதி உயிரிழந்தார்.
இது ஒருபுறம் இருக்க, ராஜாகட்டுவின் ஐந்தாம் நாள் துக்க அனுசரிப்பு தினத்தில், அவரின் தாத்தா லிங்காயா டெங்கு காய்ச்சலால் இறந்தார். இப்படி இருவரை இழந்து வாடிய குடும்பத்தினருக்கு, விடாமல் சோகத்தைத் தந்து கொண்டிருக்கிறது டெங்கு.
டெங்குவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்
ஆம், தீபாவளியன்று ஆறு வயதே ஆன ராஜாகட்டுவின் மகள் வர்ஷினி டெங்கு காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர், மகள், மாமனாரை இழந்த குடிமல்லா ராஜாகட்டுவின் மனைவி சோனி ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். தற்போது இவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரவும் மர்ம காய்ச்சல்: ஆரல்வாய்மொழியில் 50 பேருக்கு மேல் பாதிப்பு
மேலும், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகக் கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சல் மூன்று தலைமுறையினரின் உயிரைப் பறித்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவ அலுவலர் பீஷ்மா, நகராட்சி ஆணையர் ஸ்வரூபா ராணி ஆகியோர் ராஜாகட்டுவின் குடும்பத்தினரையும், அவர்களது வீட்டின் சுற்றுப்புறத்தையும் பார்வையிட்டுச் சென்றனர்.