ராஜஸ்தான் மாநிலம் மௌன்ட் அபுவில் பிரம்மகுமாரிகள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ”சமீபத்தில் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி எரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தீவிரமாகச் செயல்படும் காலத்தில் நாம் உள்ளோம். அதற்காக நிறைய பணிகளைச் செய்தாலும், இன்னும் செயல்படுத்த வேண்டியவை நிறைய உள்ளன.
பெண்களின் உணர்வுகளை மதிக்க வேண்டுமென்று தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும். இது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமையாகும். அதிகாரத்தில் பெண்களை அமர்த்தினால் மட்டுமே, சமூகத்தில் சமத்துவமும் நல்லிணக்கமும் பிறக்கும்” என்றார்.
இதையும் படிங்க: நிர்பயா பாலியல் குற்றவாளிகளின் கருணை மனுக்களை ரத்து செய்க - உள் துறை அமைச்சகம்