ETV Bharat / bharat

40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சீரழிவு - மத்திய அரசை சாடும் ராகுல் - நோட்பந்தி கி பாத்

டெல்லி : மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சீரழிவை நாடு சந்தித்துள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

demonetization-was-attack-on-indias-unorganized-economy-rahul-gandhi

author img

By

Published : Sep 3, 2020, 1:21 PM IST

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பது தொடர்பாக ’நோட்பந்தி கி பாத்’ என்ற பெயரில் தொடர்ச்சியான காணொலிகளை தன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள இரண்டாவது காணொலியில், “500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்ததன் நோக்கம் என்ன? கோடிக்கணக்கான மக்களை வங்கி வாசலில் காத்திருக்கச் செய்ததா? இதனால் நீங்கள் கூறியபடி கருப்புப் பணம் ஒழிந்ததா? இந்த நடவடிக்கையின் காரணமாக ஏழை இந்திய மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் நடந்தனவா? இதுவரை அதுபோன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை!

மாறாக இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்தியாவிலுள்ள, மத்திய அரசிற்கு நெருக்கமான 50 பெரு முதலாளிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது போன்ற நடைமுறைகளே, அதாவது பெரு முதலாளிகளுக்கான நன்மைகளே அதிகரித்துள்ளன.

பிரதமர் மோடி, இந்தியா நேரடி பணப்புழங்கள் இல்லாத நாடாக மாறவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். இதன் மூலம் அவர் துறை சாரா, அமைப்பு சாரா நிறுவனங்களை அழித்து வருகிறார்.

மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏழைகள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், சிறு வணிகர்களை பாதித்தது. இது இந்தியாவின் துறைசாரா பொருளாதாரத்தையும் மிகவும் பாதித்தது. பிரதமர் மோடியில் பணமில்லா இந்தியா, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுவணிகர்கள் அற்ற இந்தியாவாக மாறி வருகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சீரழிவை நாடு சந்தித்துள்ளது. மொத்த நாடும் தற்போதுவரை மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி வருகிறது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.