மத்தியப் பிரதேசத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக முயன்றுவருகிறது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விமர்சித்துவருகின்றனர். ஒற்றை கட்சி முறையை நிலைநாட்ட விரும்பும் பாஜக ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "ஜனநாயகம் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஆர்எஸ்எஸ், பாஜகவுடன் நமக்கு எந்த பகை உணர்வும் இல்லை. சித்தாந்தம், கொள்கை, திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் போர் நிகழ்த்துகிறோம். மக்களும் இதனை செய்ய வேண்டும். அரசுக்கு அழுத்தம் கொடுத்து தங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை மக்கள் அவர்களுக்குக் கேள்வியாக எழுப்ப வேண்டும்.
தேசியவாதம், மதம் ஆகியவற்றுக்காக அரசியல் செய்வது போன்ற சூழலை அக்கட்சி உருவாக்கியுள்ளது. வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என பாசிச கொள்கையுடைய பாஜக நினைக்கிறது. ஆனால் மக்கள், மற்ற அரசியல் கட்சிகள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து பாஜகவுக்கு கவலை இல்லை. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால், பாஜக அதனை செய்வதில்லை.
தனிநபர் ஒருவர் அரசியலில் ஈடுபடுவதை ஜனநாயகத்தில் யாராலும் தடுக்கு முடியாது. இளவரசர்கள் ஆட்சி செய்தவற்கு இந்தியாவில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை. மக்களுக்கு விருப்பமான தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரே ஆட்சி செய்வார்" என்றார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா அமைச்சருக்கு கரோனா; பீதியில் அரசியல் பிரமுகர்கள்