உத்தரப் பிரதேச மாநிலம் லக்கீம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள பாலியா கலான் பகுதி காவல் நிலையத்தில் 42 பேர் கொண்ட குழுவினர் புகார் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கோவிட்19 (கரோனா) வைரஸ் தொற்றினால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஆகவே சீன அதிபர் ஜி ஜின்பிங் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
ஏற்கனவே சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் சன் வீடோங் ஆகியோருக்கு எதிராக முசாபர்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் பரப்ப சதித்திட்டம் தீட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை வருகிற 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாடு முழுக்க கரோனா வைரஸ் தொற்று கடந்த 24 மணி நேரத்தில் 146 புதிய தொற்றுகள் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்கள் 1,649 ஆக உள்ளனர். 48 பேர் உயிரிழந்துள்ளனர். 148 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவின் வூகான் பகுதியில் முதலில் அறியப்பட்ட கரோனா என்னும் கோவிட்19 வைரஸ் தொற்று நோய்க்கு உலகில் இதுவரை எட்டு லட்சத்து 58 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 42 ஆயிரத்து 332 ஆக உள்ளது.
இதையும் படிங்க: பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கும் மம்தா பானர்ஜி