ETV Bharat / bharat

தகன மேடை இடிந்து விழுந்த விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடலை சாலையில் கிடத்தி உறவினர்கள் போராட்டம் - Roff Collapsed Accident in Up

உரிய அரசு நடவடிக்கைக்கோரி தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சாலையில் கிடத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகன மேடை இடிந்து விழுந்த விவகாரம்
தகன மேடை இடிந்து விழுந்த விவகாரம்
author img

By

Published : Jan 4, 2021, 3:32 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முரத் நகரில் உள்ள தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 25 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 20 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். பழ வியாபாரியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காகச் சென்றபோது, இந்தக் கோர விபத்து நிகழ்ந்தது.

இந்நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை இரண்டு லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் உடல்களை தேசிய நெடுஞ்சாலையில் கிடத்தி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து போராட்ட இடத்திற்கு விரைந்த அம்மாவட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இறந்தவர்களின் உடல்கள் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

இதையும் படிங்க: தகன மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.