ETV Bharat / bharat

குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவு செய்த டெல்லி!

11 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் நேற்று (அக் 20) குறைந்தபட்ச வெப்பநிலை கணக்கிடப்பட்டுள்ளது. இது 13.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

delhis-winter-breaks-record-of-the-last-11-years

author img

By

Published : Oct 21, 2020, 2:49 PM IST

டெல்லி மாநிலத்தில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் தீவிரமாகிவரும் நிலையில், கடந்த சில நாள்களாக காற்றின் வேகம் குறைந்து காணப்படுகிறது. இது காற்று மாசுபாட்டினை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நேற்று டெல்லியில் 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 13.7 டிகிரி செல்சியஸ் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை இயல்பைவிட நான்கு டிகிரி குறைவாக உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த வானிலை அலுவலர்கள், பொதுவாக அக்டோபர் மாதத்தில் இதுபோன்ற வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கவில்லை. தற்போது திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே டெல்லிக்கு குளிர்காலம் வந்துள்ளது” என்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.