ETV Bharat / bharat

ஆகஸ்ட் 17இல் டெல்லியின் இரண்டாவது செராலாஜிக்கல் கணக்கெடுப்பு வெளியீடு

author img

By

Published : Aug 9, 2020, 3:21 PM IST

SARS-CoV-2 வைரஸிலிருந்து எத்தனை பேர் ஆன்டிபாடிகளை பெற்றுள்ளனர் என்பதைக் கண்டறிய நடத்தப்பட்ட செராலாஜிக்கல் ஆய்வின் இரண்டாவது அறிக்கை ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

delhis-second-serological-survey-report-to-be-out-by-aug-17

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு எத்தனை நபர்கள் ஆன்டிபாடிகளை தங்களது உடலில் பெற்றுள்ளனர் என்பதைக் கண்டறிய டெல்லியில் செராலாஜிக்கல் (உடலில் உள்ள நீர்மங்கள் குறித்தது) கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்ட கணக்கெடுப்பு முடிவடைந்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்பின்போது ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரையில், 15 ஆயிரம் பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டது. அதில் 25 விழுக்காடு மாதிரிகள் 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களிடமும், 50 விழுக்காடு மாதிரிகள் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களிடமும் பெறப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 25 விழுக்காடு மாதிரிகள் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களிடமிருந்தும் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பின்போது டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர் ஜெயின், டெல்லியில் வாழ்ந்து வரும் 35 விழுக்காடு பேர் ஆன்டிபாடிகளை உருவாக்கியிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

ஆகஸ்ட் 17இல் டெல்லியின் இரண்டாவது செராலாஜிக்கல் கணக்கெடுப்பு வெளியீடு

முன்னதாக கணக்கெடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டபோது, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்ற பின்னரே ரத்த மாதிரிகள் பெறப்பட்டன. பின்னர் அந்த ரத்த மாதிரிகளில் ஐஜிஜி ஆன்டிபாடி சோதனை செய்யப்பட்டது. முதற்கட்ட கணக்கெடுப்பின்போது 21 ஆயிரத்து 387 மாதிரிகள் பெறப்பட்டன.

ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை, நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் டெல்லியில் உள்ள 24 விழுக்காடு பேர் கரோனா வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடிகளை பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. இதன்மூலம் டெல்லியில் 24 விழுக்காடு பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

இதையும் படிங்க: மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.4 லட்சம் சுருட்டிய இளம்பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.